ADVERTISEMENT

குவைத்திலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பப்படும் பணத்தின் மதிப்பில் 22 சதவீதம் வீழ்ச்சி..!!

Published: 15 Dec 2020, 12:37 PM |
Updated: 15 Dec 2020, 12:44 PM |
Posted By: admin

குவைத் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் தங்களின் நாடுகளுக்கு அனுப்பும் பணத்தின் (Remittance) சதவீதமானது இந்த ஆண்டின் முதலாவது காலாண்டுடன் ஒப்பிடுகையில் இரண்டாவது காலாண்டில் 21.96 சதவீதம் குறைந்துள்ளதாக குவைத் நாட்டின் ஊடக நிறுவனம் அல் ராய் செய்தி வெளியிட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த ஆண்டின் முதலாவது காலாண்டில் குவைத் நாட்டில் பணிபுரியும் வெளிநாட்டவர்கள் சுமார் 1.35 பில்லியன் குவைத் தினார்களை தங்களின் சொந்த நாடுகளுக்கு அனுப்பியிருந்த நிலையில், அந்த தொகையானது இரண்டாவது காலாண்டில் 1.056 பில்லியன் குவைத் தினார்களாக குறைந்திருப்பதாகவும் அந்த செய்தியில் குறிப்பிட்டுள்ளது.

குவைத் மத்திய வங்கி (Centre Bank of Kuwait – CBK) வெளியிட்டிருக்கும் தகவல்கள், covid -19 தொற்றுநோயின் விளைவுகள் குவைத் மற்றும் அங்கு வசிக்கும் வெளிநாட்டினரின் சொந்த நாடுகளுக்கு இடையிலான பணப்புழக்கத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன என்பதைக் காட்டுகிறது. மேலும் மத்திய வங்கியின் புள்ளிவிவரங்களின்படி, வங்கிகளில் சேமிக்கப்படும் மாதாந்திர வங்கி வைப்பு நிதியும் 235 மில்லியன் டாலர்கள் குறைந்துள்ளதாகவும் தெரிகிறது.

ADVERTISEMENT

கடந்த 2019-2020 நிதியாண்டில் முந்தைய ஆண்டை விட 3.7 சதவீதம் பணம் குவைத் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு பணம் அனுப்பப்பட்டுள்ளதாகவும் புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. இதன் மதிப்பு முந்தைய ஆண்டில் 4.3 பில்லியன் குவைத் தினார்களாகவும் தற்போதைய நிதியாண்டில் 4.47 பில்லியன் குவைத் தினார்களாக உயர்ந்திருப்பதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் COVID-19 தொற்றுநோயால் பல வெளிநாட்டினர் குவைத்தை விட்டு வெளியேறியதாலும் மற்றும் பலர் வேலையை இழந்து தங்களின் நாடுகளுக்கு திரும்பி சென்று விட்டதாலும் வரும் 2020-2021 நிதியாண்டின் இறுதிக்குள் குவைத் நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு அனுப்பும் பணத்தின் மதிப்பானது மேலும் குறைந்துவிடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

குவைத் நாட்டில் வசிக்கும் வெளிநாட்டவர்களில் மிகப்பெரிய சமூகமாக சுமார் 1.3 மில்லியன் அளவில் வசிக்கும் இந்தியர்கள் 2019 ஆம் ஆண்டில் குவைத்திலிருந்து இந்தியாவுக்கு அனுப்பிய பணத்தின் மதிப்பானது மொத்தம் 1.9 பில்லியன் குவைத் தினார்கள் என்று வாஷிங்டன் போஸ்ட் முன்பு செய்தி வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.