ADVERTISEMENT

துபாயில் புதிய டிரைவிங் சென்டரைத் திறந்து வைத்த RTA!! பல்வேறு பேக்கேஜ்களில் பயிற்சித் திட்டங்களை வழங்குவதாக தகவல்….

Published: 16 Sep 2025, 5:06 PM |
Updated: 16 Sep 2025, 5:06 PM |
Posted By: Menaka

துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) செவ்வாயன்று எமிரேட்ஸில் ஒரு புதிய ஓட்டுநர் பள்ளியைத் திறப்பதாக அறிவித்துள்ளது. இந்த புதிய ‘First Driving Centre’ அல் அவீருக்கு அருகில் எமிரேட்ஸ் சாலையில் அமைந்துள்ளது. இது தொடர்பாக ஆணையம் X தளத்தில் வெளியிட்ட ஒரு பதிவில், மையம் இப்போது VIP பயிற்சி, லைட் மோட்டார் வாகன (LMV) பயிற்சி மற்றும் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் படிப்புகள் உள்ளிட்ட பல்வேறு பயிற்சித் திட்டங்களை வழங்கி வருவதாக தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

இந்த மையம் பல்வேறு பிரிவினரின் தேவைகளுக்கு ஏற்ப பல தொகுப்புகளை வழங்குகிறது. LMV பயிற்சிக்கு 3,370 திர்ஹம்ஸ் கட்டணத்தில் தொடங்குகிறது, அதே நேரத்தில் மோட்டார் சைக்கிள் பிரிவுக்கு 3,170 திர்ஹம்ஸ் முதல் தொடங்குகிறது எனக் கூறப்பட்டுள்ளது.

கூடுதலாக, புதிய மையத்தில் கிடைக்கும் வசதிகள் மற்றும் சேவைகளைக் காண்பிக்கும் விளம்பர வீடியோவையும் RTA பகிர்ந்துள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel