ADVERTISEMENT

அக்டோபர் 1 முதல் முன்பதிவு செய்து பயணம் செய்யாதவர்களின் டிக்கெட்டுகளுக்கு ரீஃபண்ட் அளிப்பதாக எதிஹாட் ஏர்வேஸ் அறிவிப்பு..!!

Published: 24 Dec 2020, 10:30 AM |
Updated: 24 Dec 2020, 11:42 AM |
Posted By: admin

அபுதாபியை தளமாகக் கொண்ட விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் விமான நிறுவனம் கடந்த அக்டோபர் 1 அல்லது அதற்குப் பிறகான பயண தேதிகளில் டிக்கெட் முன்பதிவு செய்து பயணிக்காத நபர்களுக்கு டிக்கெட் பணத்தை திரும்ப அளிக்க முடிவு செய்துள்ளதாக அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும், இந்த டிக்கெட் ரீஃபண்ட் பெறுவதற்கு சில நிபந்தனைகளும் தெரிவிக்கப்பட்டுள்ளன.

விமான நிறுவனம் தெரிவித்திருக்கும் நிபந்தனைகள்

  • முன்பதிவு செய்த நாளில் விமானங்கள் ரத்து செய்யப்படல்
  • பயணம் செய்ய வேண்டிய நபர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தால்
  • பயணத்தடை அல்லது அரசு விதித்த கட்டுப்பாடுகளால் விமானம் சேவை பாதிக்கப்பட்டிருத்தல்

மேற்கூறிய ஏதாவது ஒரு சூழ்நிலையின் காரணமாக பயணம் செய்ய முடியாமல் போன பயணிகளுக்கு மட்டுமே டிக்கெட் ரீஃபண்ட் அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்சமயம் எதிஹாட் ஏர்வேஸ் உலகின் 60 க்கும் மேற்பட்ட நகரங்களுக்கு விமான சேவைகளை இயக்கி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT