ஐக்கிய அரபு அமீரகத்தில் நாளை (நவம்பர் 3) கொண்டாடப்படும் அமீரக கொடி நாளை முன்னிட்டு குளோபல் வில்லேஜில் குடும்பத்துடன் ஐக்கிய அரபு அமீரக கொடி தினத்தைக் கொண்டாட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நாளை இரவு 8.30 மணிக்கு குளோபல் வில்லேஜ் ஒரு ட்ரோன் நிகழ்ச்சியை நடத்தவிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வின் போது நூற்றுக்கணக்கான ட்ரோன்கள் வானத்தை ஒளிரச் செய்யும் என்றும், மேலும் ஐக்கிய அரபு அமீரக கொடி உட்பட பிரமிக்க வைக்கும் வடிவங்களை வானில் உருவாக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் கொடி நாளான நவம்பர் 3 ஆம் தேதி இந்தாண்டு அதன் 13 வது ஆண்டைக் குறிக்கின்றது. இது ஒரு பொது விடுமுறை அல்ல, ஆனால் குடியிருப்பாளர்களும் குடிமக்களும் அலுவலகங்கள், பள்ளிகள், பூங்காக்கள் மற்றும் பொது இடங்களில் கொடியை ஏற்றி மரியாதை செலுத்தும் நாளாகும்.
ஐக்கிய அரபு அமீரக கொடி தினம் முதன்முதலில் 2013 இல் கொண்டாடப்பட்டது. இது ஐக்கிய அரபு அமீரக துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் 2004 ஆம் ஆண்டு ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியாக ஷேக் கலீஃபா பின் சயீத் அல் நஹ்யான் பதவியேற்றதன் ஆண்டு நிறைவைக் குறிக்கும் ஒரு முயற்சியாகும். அதன் பின்னர் இது ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 3 ஆம் தேதி ஒற்றுமை மற்றும் தேசிய பெருமையின் அடையாளமாக நினைவுகூரப்பட்டு வருகின்றது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel