ADVERTISEMENT

நவம்பர் 3 ஆம் தேதி அமீரகக் கொடி தினம் கொண்டாடப்படுவது ஏன் தெரியுமா? பின்னணியில் உள்ள சுவாரசியமான கதை!!

Published: 3 Nov 2025, 10:09 AM |
Updated: 3 Nov 2025, 10:09 AM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தை தங்களின் வீடாகக் கருதும் மில்லியன் கணக்கான குடியிருப்பாளர்கள் அமீரகக் கொடி தினத்தை முன்னிட்டு இன்றைய தினம், அவர்கள் வசிக்கும் வீடுகள், தெருக்கள், பள்ளிகள் மற்றும் அலுவலகங்களில் சிவப்பு, பச்சை, வெள்ளை மற்றும் கருப்பு நிறங்களை உள்ளடக்கிய தேசியக் கொடியை ஏற்றி பெருமையுடன் காட்சிப்படுத்துவதால் அமீரகம் முழுவதும் வண்ணமயமாக காட்சியளிக்கும். நவம்பர் 3 ஆம் தேதி, தேசிய ஒற்றுமை மற்றும் பெருமையின் சக்திவாய்ந்த அடையாளமான அமீரகக் கொடி தினத்தை குடிமக்கள் மற்றும் வெளிநாட்டினர் ஒன்றிணைந்து கொண்டாடுவார்கள் என்பது சிறப்பிற்குரியது.

ADVERTISEMENT

முன்னதாக, ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான மாண்புமிகு ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள், காலை 11 மணிக்கு கொடியை ஏற்றுமாறு நாடு முழுவதும் உள்ள அனைவருக்கும் அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த பெருமைமிக்க சந்தர்ப்பத்திற்கு நாடு தயாராகி வரும் நிலையில், நவம்பர் 3 ஏன் அமீரகக் கொடி தினமாக அனுசரிக்கப்படுகிறது, அதன் நிறங்கள் உண்மையில் எதைக் குறிக்கின்றன மற்றும் கொடியின் பின்னணியில் உள்ள ஊக்கமளிக்கும் கதை போன்றவற்றை இங்கே சுருக்கமாகக் காணலாம்.

ADVERTISEMENT

அமீரகக் கொடி நாள் ஏன் நவம்பர் 3 கொண்டாடப்படுகிறது?
ஐக்கிய அரபு அமீரகக் கொடி தினம் என்பது வெறும் தேசபக்தி கொண்டாட்டம் மட்டும் கிடையாது, இது மறைந்த ஷேக் கலீஃபா பின் சையத் அல் நஹ்யான் ஐக்கிய அரபு அமீரகத்தின் இரண்டாவது ஜனாதிபதியாக பதவியேற்றதைக் குறிக்கிறது.

டிசம்பர் 2 அன்று ஐக்கிய அரபு அமீரக தேசிய தினம் 1971 இல் தேசம் நிறுவப்பட்டதைக் கொண்டாடுகிறது, அதைத் தொடர்ந்து வந்த தொலைநோக்கு, தலைமைத்துவம் மற்றும் முன்னேற்றத்தை கொடி நாள் கொண்டாடுகிறது.

ADVERTISEMENT

இந்த நிகழ்வை 2012 இல் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அதிகாரப்பூர்வமாக அறிவித்தார், முதல் கொண்டாட்டம் 2013 இல் நடைபெற்றது. அப்போதிருந்து, நவம்பர் 3 ஒவ்வொரு குடியிருப்பாளரும் எமிரேட்ஸ் மீதான தங்கள் அன்பையும் விசுவாசத்தையும் பெருமையுடன் மீண்டும் உறுதிப்படுத்தும் நாளாக மாறியுள்ளது.

கொடியின் பின்னணியில் உள்ள கதை

ஐக்கிய அரபு அமீரகக் கொடி 19 வயதான எமிராட்டி இளைஞரால் வடிவமைக்கப்பட்டது என்பது உங்களுக்குத் தெரியுமா? ஆம், நாடு உருவாக்கம் அறிவிக்கப்படுவதற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பு அல் திவான் அல் அமிரி அபுதாபி (Al Diwan Al Amiri Abu Dhabi) கொடியை வடிவமைப்பதற்கான போட்டியை அறிவித்தது. அல் இத்திஹாத் செய்தித்தாளில் ஒரு வடிவமைப்பு போட்டிக்கான விளம்பரத்தைப் பார்த்த அப்துல்லா முகமது அல் மா’இனா என்பவர் போட்டியில் தனது அதிர்ஷ்டத்தை முயற்சிக்க முடிவு செய்து தனது வடிவத்தை அனுப்பினார், அது பலனளித்தது, 1,030 க்கும் மேற்பட்ட சமர்ப்பிப்புகளில் அவரது வடிவமைப்புகளில் ஒன்று தேர்வு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

மேலும், டிசம்பர் 2, 1971 அன்று, அவரது வடிவமைப்பை முதன்முதலில் ஷேக் சையத் பின் சுல்தான் அல் நஹ்யானால் ஏற்றப்பட்டது. தேசம் உருவானதைக் குறிக்கும் வகையில் துபாயில் உள்ள யூனியன் ஹவுஸிலும், அபுதாபியிலும் இரண்டு கொடிகள் அன்று உயர்த்தப்பட்டன. அப்போதுதான் அல் ம’னா தனது வடிவமைப்பு தேர்ந்தெடுக்கப்பட்டதை அறிந்ததாகவும், இந்த வரலாற்று தருணத்தை தொலைக்காட்சியில் பார்த்து, அதை நேரில் பறப்பதைக் காண முஷ்ரிஃப் அரண்மனைக்கு விரைந்ததாகவும் கூறப்படுகிறது.

வண்ணங்களின் அர்த்தம்
சஃபி-உத்தீன் அல் ஹாலியின் கவிதையால் ஈர்க்கப்பட்ட அல் ம’எனாவின் வடிவமைப்பு, ஐக்கிய அரபு அமீரகத்தின் மதிப்புகள் மற்றும் வரலாற்றை அதன் நான்கு வண்ணங்கள் மூலம் பிரதிபலிக்கிறது:

  • சிவப்பு – துணிச்சல், தைரியம் மற்றும் கடந்த தலைமுறைகளின் தியாகங்கள்
  • பச்சை – வளர்ச்சி, செழிப்பு மற்றும் கலாச்சார முன்னேற்றம்
  • வெள்ளை – அமைதி, தாராள மனப்பான்மை மற்றும் நன்மை
  • கருப்பு – வலிமை, சக்தி மற்றும் அநீதிக்கு எதிரான நாட்டின் நிலைப்பாடு

கடந்த கால மணல் திட்டுகளிலிருந்து இன்றைய வானளாவிய கட்டிடங்கள் வரை, ஐக்கிய அரபு அமீரகக் கொடியானது பெருமை, ஒற்றுமை மற்றும் பகிரப்பட்ட சொந்த உணர்வை ஊக்குவிக்கிறது, நாட்டின் பலம் அதன் மக்களிடம் உள்ளது என்பதை அனைவருக்கும் நினைவூட்டுகிறது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel