ஓமானில் கொரோனாவிற்கான தடுப்பூசிகள் வந்திறங்கியதை தொடர்ந்து, கொரோனாவிற்கான தடுப்பூசி பிரச்சாரமானது இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாரப்பூர்வமாக தொடங்கப்பட்டுள்ளது. தடுப்பூசி பிரச்சாரத்தில் முதல் நபராக ஓமானின் சுகாதார அமைச்சர் பங்கேற்று கொரோனாவிற்கான முதல் டோஸைப் பெற்றுள்ளார். முதல் கட்டமாக 15,000 டோஸ் கொண்ட தடுப்பூசிகள் பெறப்பட்டதாகவும் இதன் மூலம் 7,500 பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாடு தழுவிய இந்த தடுப்பூசி பிரச்சாரத்தின் முதல் கட்டத்தில், முன்னணி சுகாதார ஊழியர்கள், வயதானவர்கள் மற்றும் நாட்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் ஆகியோருக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இது குறித்து சுகாதார அமைச்சர் டாக்டர் அகமது பின் முகமது அல் சயீதி அவர்கள் கூறும் பொழுது, இரண்டாம் கட்டமாக 28,000 டோஸ்களை கொண்ட தடுப்பூசிகள் ஜனவரி மாதம் ஓமானை வந்தடையும் என்று தெரிவித்துள்ளார்.
கொரோனாவிற்கான தடுப்பூசியில் ஒரு நபருக்கு இரண்டு டோஸ் தேவைப்படும் என்றும், இரண்டாவது டோஸ் 21 நாட்களுக்குப் பிறகு செலுத்தப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தடுப்பூசியானது நாட்டில் உள்ள அனைத்து குடியிமக்களுக்கும் வெளிநாட்டவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் என்றும் நாட்டின் அனைத்து பகுதிகளுக்கும் தடுப்பூசிகள் விநியோகிக்கப்பட்டு முன்னுரிமையின் அடிப்படையில் தடுப்பூசிகள் போடப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடுப்பூசியினாது கொரோனாவிற்கு எதிராக 95 சதவீத செயல்திறன் மிக்கது என்றும் குறிப்பிடத்தக்க பக்க விளைவுகள் இல்லாமல் இன்று வரை பல்லாயிரக்கணக்கானவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.
நாட்டில் கொரோனாவிற்கான தடுப்பூசி பெற 40 மையங்களை சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.
மஸ்கட் கவர்னரேட்
- பவுஷார் ஹெல்த் காம்ப்ளெக்ஸ் (Baushar health complex)
- குரியாத் ஹெல்த் சென்டர் (Quriyat health centre)
- சீப் பாலிக்ளினிக் (Seeb polyclinic)
அல் பட்டினா (South)
- நக்ல் (Nakhl)
- பார்கா (Barka)
- ருஸ்டாக் (Rustaq)
- அல் முஸ்னா (Al Musnaah)
அல் ஷர்கியா (North)
- இப்ரா (Ibra)
- சினாவ் (Sinaw)
- சமத் அல் ஆஷான் (Samad Al Ashaan)
- பிடியா (Bidiyah)
அல் ஷர்கியா (South)
- நீரிழிவு சிகிச்சைக்கான சர் ஸ்பெஷலிஸ்ட் சென்டர் (Sur Specialist Center for Diabetes Treatment)
- மசிரா மருத்துவமனை (Masirah Hospital)
- ஜாலன் ஹெல்த் காம்ப்ளக்ஸ் (Jaalan Health Complex)
- ஜலான் பானி புஹாசன் சுகாதார மையம் (Jaalan Bani Bu Hassan Health Center)
வடக்கு அல் பட்டினாவில் ஆறு மையங்களிலும், முசந்தம் கவர்னரேட்டில் ஐந்து மையங்களிலும் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அல் தாகிலியா கவர்னரேட்டில், தடுப்பூசி பெற ஏழு மையங்களையும், அல் தஹிரா கவர்னரேட்டில் மூன்று மையங்களையும் (இப்ரி, தங்க் மற்றும் யான்குல்) அமைச்சகம் அறிவித்துள்ளது. அத்துடன் தோஃபர் கவர்னரேட்டில், நான்கு மையங்களில் இந்த தடுப்பூசிகள் வழங்கப்படும் என்றும் சுகாதார அமைச்சகம் அறிவித்துள்ளது.