சமீபத்தில் நடைபெற்ற துபாய் டூட்டி ஃப்ரீ மில்லினியம் மில்லினியர் டிராவில் அதுல் ராவ் எனும் இந்தியருக்கு ஒரு மில்லியன் டாலர் ஜாக்பாட் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. துபாயில் வசிக்கும் அதுல் ராவ் சீரிஸ் 522 இல் தனது அதிர்ஷ்ட டிக்கெட் எண் 2242 மூலம் ஒரே நாளில் மில்லியனராக மாறியுள்ளார்.
மும்பையைப் பூர்விகமாகக் கொண்ட ராவ், 1998 முதல் அமீரகம் மற்றும் ஓமான் இடையே வசித்து வருகிறார். இரண்டரை வாரங்களுக்கு முன்பு, ஒரு நண்பரின் திருமணத்திற்காக பாலிக்கு செல்லும் வழியில் துபாய் சர்வதேச விமான நிலையம் வழியாக செல்லும் போது அவரது பிறந்தநாள் அன்று அவர் அதிர்ஷ்ட டிக்கெட்டை வாங்கியதாகத் தெரிவித்துள்ளார்.
“எனக்கு அழைப்பு வந்ததும், இது ஒரு பிரான்க் என்று நினைத்தேன், ஏனெனில், இந்த நாட்களில் பல ஸ்பேம் செய்திகள் உள்ளன. துபாய் டூட்டி ஃப்ரீ வலைத்தளத்தை நானே சரிபார்க்கும் வரை அதை நம்புவது கடினமாக இருந்தது” என்று வங்கி ஊழியரான ராவ் கூறியுள்ளார்.
2012 முதல் டூட்டி ஃப்ரீ டிக்கெட்டுகளை வாங்கும் ராவ், பல ஆண்டுகளாக கிட்டத்தட்ட 50,000 திர்ஹம்ஸ் வரை டிக்கெட் வாங்க முதலீடு செய்ததாகக் குறிப்பிட்டுள்ளார். “ஒவ்வொரு முறையும் நான் பயணம் செய்யும் போது, பைக், கார் மற்றும் மில்லியனர் டிராக்களுக்கு நான் மூன்று டிக்கெட்டுகளை வாங்குகிறேன். இந்த முறை, இறுதியாக வெற்றி பெற்றது மகிழ்ச்சி” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், பரிசுத் தொகையின் ஒரு பகுதியை தொண்டு, புத்திசாலித்தனமான முதலீடுகள் மற்றும் துபாயில் மீண்டும் சொத்து வாங்குவதற்கு பயன்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தனது திட்டம் குறித்து வெளிப்படுத்தியுள்ளார். அதுமட்டுமின்றி, கோடீஸ்வரரானாலும், டிராவில் பங்கேற்பதை நிறுத்தும் திட்டம் இல்லை என்று ராவ் தெரிவித்துள்ளார்.
இது குறித்து கூறும்போது “நான் கண்டிப்பாக மீண்டும் டிக்கெட் வாங்குவேன், நான் ஏற்கனவே பைக் டிராவிற்கான டிக்கெட்டை வாங்கிவிட்டேன், யாருக்கு தெரியும்! ஒருவேளை நான் அடுத்த வெற்றியை பெறுவேன். பொறுமை உண்மையில் பலனளிக்கிறது என்பதை இந்த வெற்றி நிரூபிக்கிறது” என்று தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel