சவுதி அரேபியாவில் கடந்த திங்கள்கிழமையன்று, உம்ராவிற்கு சென்ற இந்தியர்களை ஏற்றிச் சென்ற பேருந்தும் எரிபொருள் டேங்கரும் மோதியதால் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் பலர் உயிரிழந்தனர் மற்றும் காயமடைந்தனர். இந்நிலையில், இச்சம்பவத்திற்கு ஐக்கிய அரபு அமீரகம் இந்தியாவுடன் அதன் ஒற்றுமையை வெளிப்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக செவ்வாய்கிழமை வெளியிடப்பட்ட ஒரு அறிக்கையில், வெளியுறவு அமைச்சகம் இந்த சம்பவத்தை வேதனை தரக்கூடிய சோகம் என்று விவரித்ததுடன் பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுக்கும், இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் தனது ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக் கொண்டது. மேலும், விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் அமைச்சகம் தெரிவித்துள்ளது.
கடந்த திங்கள்கிழமை சவூதியில் உம்ராவிற்கு சென்ற இந்தியர்களை ஏற்றி சென்ற பேருந்து நள்ளிரவு மக்காவில் இருந்து மதீனா சென்று கொண்டிருந்த வழியில் எரிபொருள் டேங்கர் லாரியுடன் மோதியதில் குழந்தைகள் உட்பட 45 பேர் உயிரிழந்தனர். ஒருவர் மட்டுமே காயத்துடன் உயிர் தப்பிய நிலையில் அவருக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது.
இதில் ஒரே குடும்பத்தில் உள்ள மூன்று தலைமுறைகளை சேர்ந்த 18 பேர் உயிரிழந்தது அக்குடும்பத்தை பெரும் சோகத்திற்குள்ளாக்கியுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel