ADVERTISEMENT

அமீரகத்தில் நிலவிய கடுமையான மூடுபனி.. 7.8°C ஆக பதிவான வெப்பநிலை.. வாகன ஓட்டிகளுக்கு எச்சரிக்கை..

Published: 20 Nov 2025, 9:34 AM |
Updated: 20 Nov 2025, 9:44 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் குளிரான வானிலை நிலவி வரும் நிலையில், இன்று (நவம்பர் 20, வியாழக்கிழமை) குறைந்தபட்ச வெப்பநிலையாக 7.8°C வெப்பநிலை பதிவாகியுள்ளது. தேசிய வானிலை ஆய்வு மையத்தின் (NCM) படி, காலை 7 மணிக்கு அல் அய்னின் ரக்னாவில் இந்த மிகக் குறைந்த வெப்பநிலை பதிவானதாக கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

மேலும் நவம்பர் 19, புதன்கிழமை ஐக்கிய அரபு அமீரகத்தில் பதிவான மிகக் குறைந்த வெப்பநிலையான 9.2°C -ம் அதே இடத்தில் பதிவாகியது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் துபாய் மற்றும் அபுதாபியில் முறையே 23°C மற்றும் 21°C என குறைந்தபட்ச வெப்பநிலை இன்று பதிவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அத்துடன் நாட்டின் சில பகுதிகளை அடர்ந்த மூடுபனி சூழ்ந்துள்ளதால், இன்று காலை ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் வாகனம் ஓட்டும்போது எச்சரிக்கையாக இருக்குமாறு அதிகாரிகள் வலியுறுத்தினர். நவம்பர் 20, வியாழக்கிழமை காலை 10:30 மணி வரை நாட்டின் பல பகுதிகளைப் பாதிக்கும் மூடுபனிக்கு, ஐக்கிய அரபு அமீரக தேசிய வானிலை ஆய்வு மையம் (NCM) சிவப்பு மற்றும் மஞ்சள் எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.

ADVERTISEMENT

இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பாதுகாப்பான பிரேக்கிங் தூரத்தை தொடர்ந்து பராமரிக்க வேண்டும், திடீர் பாதை மாற்றங்கள் அல்லது முந்திச் செல்லும் மனநிலையை தவிர்க்க வேண்டும். துபாய் மற்றும் அபுதாபி முழுவதும் உள்ள அதிகாரிகள், தெரிவுநிலை அளவை உன்னிப்பாகக் கண்காணிக்க வேண்டும் என்றும், குறைக்கப்பட்ட வேக வரம்புகளுடன் பொறுமை மற்றும் இணக்கம் ஆகியவை இன்று ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் சாலைப் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான மிகவும் பயனுள்ள கருவிகளாக உள்ளன எனவும் தெரிவித்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel

ADVERTISEMENT