ADVERTISEMENT

துபாய் ரன் 2025: ஷேக் சையத் சாலையில் 5 மணி முதலே ஆர்வத்துடன் திரண்ட பல்லாயிரக்கணக்கான பங்கேற்பாளர்கள்!!

Published: 23 Nov 2025, 1:16 PM |
Updated: 23 Nov 2025, 1:18 PM |
Posted By: Menaka

உலகின் மிகப்பெரிய சமூக உடற்பயிற்சி நிகழ்வுகளில் ஒன்றான துபாய் ரன்னின் ஏழாவது பதிப்பு ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 6:30 மணிக்கு ஒரு உற்சாகமான சூழ்நிலை மற்றும் வானவேடிக்கை நிகழ்ச்சிகளுடன் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி சிறப்பாக முடிந்தது. துபாய் ஃபிட்னஸ் சேலஞ்சின் (DFC) ஒரு பகுதியாக நடைபெறும் இந்த மாபெரும் இலவச ஜாகிங் நிகழ்வில் பங்கேற்பதற்காக ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள், குடும்பங்கள், மாணவர்கள், விளையாட்டு வீரர்கள் அதிகாலை 5 மணி முதலே ஷேக் சையத் சாலையை ஆக்கிரமித்தனர்.

ADVERTISEMENT

துபாயின் பட்டத்து இளவரசர் ஷேக் ஹம்தான் பின் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்களால் தொடங்கப்பட்ட இந்த இலவச நிகழ்வு, உலகளாவிய உடற்பயிற்சி சிறப்பம்சமாக வளர்ந்துள்ளது, அனைத்து வயது மற்றும் திறன்களையும் கொண்ட பங்கேற்பாளர்களை ஈர்க்கிறது.

இந்த வருடாந்திர உடற்பயிற்சி நிகழ்வைப் பற்றிய சிறிய கண்ணோட்டம் இங்கே…

ADVERTISEMENT

துபாய் ரன்னில் பங்கேற்ற பங்கேற்பாளர்கள் அனைவரும் மியூசியம் ஆஃப் தி ஃபியூச்சர், எமிரேட்ஸ் டவர்ஸ், புர்ஜ் கலீஃபா மற்றும் துபாய் ஓபரா போன்ற ஐந்னமான அடையாளங்களைக் கடந்து செல்லும் பாதையில், வான்வழி ஸ்டண்ட், டிரம்மர்கள் உட்பட துடிப்பான பொழுதுபோக்குகளால் வரவேற்கப்பட்டனர். எனவே, இது வெறும் உடற்பயிற்சி நிகழ்வு மட்டுமல்ல, இது ஒரு கொண்டாட்டம் என்று பங்கேற்பாளர்கள் விவரித்தனர்.

இதற்கிடையில், முன்கூட்டிய துபாய் ரன் நிகழ்வை ஆதரிக்க, துபாய் மெட்ரோ அதிகாலை 3:00 மணி முதல் நள்ளிரவு வரை இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டது., இதனால் பங்கேற்பாளர்கள் தொடக்கப் புள்ளியை எளிதாக அடைய முடிந்ததாகத் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமில்லாமல், RTA அதிகாலை 3:00 மணி முதல் காலை 10:00 மணி வரை சாலை மூடல்கள் அமலில் இருக்கும் என்று அறிவித்திருந்தது. இது ஷேக் சையத் சாலை, ஃபைனான்ஷியல் சென்டர் ஸ்ட்ரீட் மற்றும் முகமது பின் ரஷீத் பவுல்வர்டு உள்ளிட்ட முக்கிய பகுதிகளைப் பாதித்தது.

ADVERTISEMENT

மீண்டும் திறக்கப்பட்ட சாலைகள்

மாபெரும் நிகழ்வுக்காக மூடப்பட்ட பெரும்பாலான சாலைகள் இறுதிப் போட்டிக்கு பிறகு காலை 9:30 மணிக்கு, மீண்டும் திறக்கப்பட்டதாக RTA உறுதிப்படுத்தியது. எனவே, காலையில் முன்னதாக மாற்றுப் பாதைகளில் செல்ல அறிவுறுத்தப்பட்ட வாகன ஓட்டிகள் படிப்படியாக சாலை அணுகலை பெற்றனர்.

பங்கேற்பாளர்களின் கருத்து

பல ஓட்டப்பந்தய வீரர்கள் நகரத்தின் முக்கிய வழித்தடமான ஷேக் சையத் சாலையை எந்த போக்குவரத்தும் இல்லாமல் மக்கள் வெள்ளத்தில் ஆரவாரத்துடன் போட்டியிட்ட அனுபவத்தைப் பாராட்டியுள்ளனர். மேலும் மெட்ரோ வழியாக ஆரம்பகால போக்குவரத்து விருப்பங்கள் மூலம், காலை எளிதாக இலக்கை அடைய முடிந்ததாகவும் மக்கள் தங்கள் அனுபவங்களைப் பங்கிர்ந்து கொண்டனர்.

பங்கேற்பாளர்களின் கருத்துப்படி, துபாய் ரன் 2025 ஒரு போட்டி என்பதை விட சிறந்த அனுபவமாக இருந்தது. சீரான போக்குவரத்து, நன்கு நிர்வகிக்கப்பட்ட சாலைகள் மற்றும் வேடிக்கையான, அனைவரையும் உள்ளடக்கிய சூழ்நிலையுடன், பங்கேற்பாளர்கள் நடந்து, ஜாகிங் செய்து, அருகருகே ஓடி, இந்த நிகழ்வு அமீரகவாசிகளுக்கு பிடித்தமான நிகழ்வாக உள்ளது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்துள்ளனர்.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel