ஐக்கிய அரபு அமீரகம் தனது 54வது தேசிய தினக் கொண்டாட்டங்களுக்கு தயாராகி வரும் வேளையில், அமீரகக் குடியிருப்பாளர்கள் இந்தாண்டின் கடைசி நீண்ட வார விடுமுறைக்கு உற்சாகமாக தயாராகி வருகின்றனர். இந்நிலையில், துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) தேசிய தின விடுமுறைக்காக 3 நாட்கள் இலவச பார்க்கிங் இடங்களை அறிவித்துள்ளது.
துபாயில் உள்ள வாகன ஓட்டிகள் இந்த நீண்ட வார இறுதியில் மூன்று நாட்கள் இலவச பொது வாகன நிறுத்துமிடத்தை அனுபவிப்பார்கள். அதாவது திங்கள் மற்றும் செவ்வாய் (டிசம்பர் 1 மற்றும் 2) ஈத் அல் எதிஹாத் விடுமுறை நாட்களில் அனைத்து பொது வாகன நிறுத்துமிடங்களும் இலவசம். அதே போல் ஞாயிற்றுக்கிழமை (நவம்பர் 30) விடுமுறை நாள் என்பதால் எப்போதும் போல் அன்றைய தினமும் பார்க்கிங் கட்டணமும் இலவசம் என கூறப்பட்டுள்ளது.
அத்துடன் துபாயின் சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் வியாழக்கிழமை பார்க்கிங் கட்டணம் புதன்கிழமை (டிசம்பர் 3) மீண்டும் தொடங்கும் என்று அறிவித்துள்ளது. இருப்பினும், இந்த இலவச பார்க்கிங் துபாயில் உள்ள மல்டி ஸ்டோரீ கார் பார்க்கிங் மற்றும் அல் கைல் கேட் N-365 ஆகியவற்றை உள்ளடக்காது எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel