ADVERTISEMENT

அதிர்ஷ்டம் வந்து கதவை தட்டியும் தெரியாமல் இருக்கும் நபர்..!! 20 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை வென்ற இந்தியரை தேடும் பிக் டிக்கெட் குழுவினர்..!!

Published: 3 Jan 2021, 5:39 PM |
Updated: 3 Jan 2021, 5:48 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் ஒவ்வொரு மாதம் 3-ம் தேதியும் பிக் டிக்கெட்டிற்கான (Big Ticket) குலுக்கல் நடைபெற்று வெற்றியாளர்களின் பெயர்கள் வெளியிடப்படும். அதன்படி, இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடைபெற்ற இந்த மாதத்திற்கான பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் (Big Ticket raffle draw) இந்தியர் ஒருவர் 20 மில்லியன் திர்ஹம் பரிசுத்தொகையை தட்டிச்சென்றுள்ளார்.

ADVERTISEMENT

டிசம்பர் 29 அன்று வாங்கப்பட்ட 323601 என்ற எண்ணைக் கொண்ட டிக்கெட்டினை அப்துஸ்ஸலாம் N.V என்பவர் வாங்கியுள்ளார். இதன் மூலம், இந்த ஆண்டின் ரேஃபிள் டிராவின் முதல் அதிர்ஷ்ட வெற்றியாளரானார் அப்துஸ்ஸலாம்.

இருப்பினும், பிக் டிக்கெட் குழுவினரால் அவரை தொடர்பு கொள்ள முடியளவில்லை. அப்துஸ்ஸலாம் வழங்கியிருந்த இரண்டு தொடர்பு எண்களில் ஒன்று தவறான எண்ணாகவும் மற்றொன்று நாட் ரீச்சபிள் என்று வருவதாகவும் பிக் டிக்கெட் குழுமம் சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால், அவரை தொடர்பு கொள்ள பிக் டிக்கெட் குழுவினர் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர்.

ADVERTISEMENT

அவரது தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்ட போது மலையாள மொழியில் பேசியதன் மூலம், அப்துஸ்ஸலாம் கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் என்று கூறப்படுகிறது.

தற்பொழுது ஜனவரி மாதத்திற்கான பிக் டிக்கெட் ரேஃபிள் டிரா முடிந்த நிலையில், அடுத்த மாதம் நடைபெறவிருக்கும் பிக் டிக்கெட் ரேஃபிள் டிராவில் முதல் நபராக வெற்றி பெறும் அதிர்ஷ்டசாலிக்கு 15 மில்லியன் திர்ஹம்ஸ் பரிசுத்தொகை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT