ADVERTISEMENT

இரண்டு நாட்களுக்கு இலவச பார்க்கிங்கை அறிவித்த ஷார்ஜா..

Published: 1 Dec 2025, 10:30 AM |
Updated: 1 Dec 2025, 10:30 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் 54வது தேசிய தினத்தை குறிக்கும் வகையில், ஷார்ஜாவில் வாகன ஓட்டிகள் இரண்டு நாட்களுக்கு இலவச பொது வாகன நிறுத்துமிடத்தை அனுபவிப்பார்கள் என்று ஷார்ஜா நகராட்சி அறிவித்துள்ளது. அதன்படி டிசம்பர் 2 மற்றும் 3 (திங்கள் மற்றும் செவ்வாய்) ஆகிய தேதிகளில் ஷார்ஜாவில் பொது வாகன நிறுத்துமிடங்கள் இலவசம் என கூறப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இருப்பினும் சில குறிப்பிட்ட பகுதிகளுக்கு இந்த இலவச பார்க்கிங் பொருந்தாது என்று அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர். அப்பகுதிகளில் கட்டணங்கள் தொடர்ந்து அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது. அவை:

  • தானியங்கி அமைப்புகள் மூலம் செயல்படும் ஸ்மார்ட் பார்க்கிங் யார்டுகள் (smart parking yards)
  • நீல தகவல் பலகைகளால் அடையாளம் காணப்பட்ட அதிகாரப்பூர்வ விடுமுறை நாட்களில் செயல்பட நியமிக்கப்பட்ட பொது கட்டண பார்க்கிங் மண்டலங்கள்

விதிமீறல்களைத் தவிர்க்கவும், கொண்டாட்டங்களின் போது போக்குவரத்து மற்றும் பார்க்கிங் விதிமுறைகளைப் பின்பற்றவும் வாகன ஓட்டிகளை கவனமாக சரிபார்க்குமாறு ஷார்ஜா முனிசிபாலிட்டி வலியுறுத்தியுள்ளது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil Whatsapp Channel