ஐக்கிய அரபு அமீரகத்தின் மனிதவளம் மற்றும் எமிராட்டிசேஷன் அமைச்சகம் (MoHRE), தனியார் துறையில் பணிபுரியும் எமிராட்டி ஊழியர்களுக்கு புதிய குறைந்தபட்ச ஊதியமாக 6,000 திர்ஹம்ஸ் நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகவும், இது ஜனவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவித்துள்ளது.
இந்த புதுப்பிப்பு முதலில் MoHRE ஸ்மார்ட் செயலியில் டிசம்பர் 27 அன்று வெளியிடப்பட்டது, பின்னர் X தளத்தில் ஒரு பதிவில் அமைச்சகத்தால் உறுதிப்படுத்தப்பட்டது.
ஜனவரி 1, 2026 முதல் வரும் மாற்றம்
அமைச்சகத்தின் அறிக்கையின் படி, ஜனவரி 1, 2026 முதல், தனியார் துறையில் பணிபுரியும் எமிரேட்டிகளுக்கான குறைந்தபட்ச சம்பளம் 6,000 திர்ஹமாக மாற்றியமைக்கப்படும். இது குடிமக்கள் பணி அனுமதிகள் தொடர்பான அனைத்து சேவைகளுக்கும் பொருந்தும் என்று கூறப்பட்டுள்ளது.
இதன் மூலம் ஜனவரி 1 முதல், பதிவுசெய்யப்பட்ட சம்பளம் 6,000 திர்ஹம்களுக்குக் குறைவாக இருந்தால், முதலாளிகள் குடிமகன் பணி அனுமதிக்கான எந்தவொரு விண்ணப்பத்தையும் சமர்ப்பிக்கவோ அல்லது அச்சிடவோ முடியாது. இதுபோன்ற சந்தர்ப்பங்களில், முதலாளிகள் செயல்முறையை தொடர்வதற்கு முன் சம்பளத்தை சரிசெய்ய வேண்டும்.
இந்த புதிய நிபந்தனையை நினைவூட்டுவதற்காக அமைச்சகம் அதன் சேவை சேனல்கள் மற்றும் MoHRE ஸ்மார்ட் செயலி மூலம் முதலாளிகளுக்கு எச்சரிக்கை அறிவிப்புகளை அனுப்பும் என்றும் தெரிவித்துள்ளது.
ஜூலை 2026 முதல் அமலாக்கம்
ஜூன் 30, 2026க்குள் சம்பளம் சரி செய்யப்படாவிட்டால், ஜூலை 1, 2026 முதல் அமலாக்க நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் பின்வருவன அடங்கும்:
- நிறுவனத்தின் எமிராட்டிசேஷன் ஒதுக்கீட்டு கணக்கீடுகளில் இருந்து எமிராட்டி ஊழியரை விலக்குதல்
- குறைந்தபட்ச ஊதிய விதியை பின்பற்றாததால் புதிய பணி அனுமதிகளை வழங்குவதைத் தடுக்கும் வகையில் நிறுவனத்திற்கு கட்டுப்பாடுகளை விதித்தல்
விதி யாருக்கு பொருந்தும்?
ஜனவரி 1, 2026 முதல் புதிதாக வழங்கப்பட்டாலும், புதுப்பிக்கப்பட்டாலும் அல்லது திருத்தப்பட்டாலும், இரண்டு வருட செல்லுபடியாகும் குடிமக்கள் பணி அனுமதிகளுக்கு மட்டுமே இந்த சம்பள உயர்வு பொருந்தும் என்று அமைச்சகம் தெளிவுபடுத்தியுள்ளது.
முன்னதாக, ஜனவரி 1, 2025 முதல் பணியமர்த்தப்பட்ட எமிரேட்டிகளுக்கு 5,000 திர்ஹம் குறைந்தபட்ச சம்பளத்தை அமைச்சகம் நிர்ணயித்திருந்தது. பிப்ரவரி 2025க்குள் இந்தத் தேவையைப் பூர்த்தி செய்யத் தவறிய முதலாளிகள் எமிராட்டிசேஷன் இலக்குகளில் இருந்து விலக்குதல் மற்றும் புதிய பணி அனுமதிகளை வழங்குவதில் கட்டுப்பாடுகள் உள்ளிட்ட அபராதங்களை எதிர்கொண்டனர்.
சமீபத்திய புதுப்பிப்பு குறைந்தபட்ச ஊதியத்தை மேலும் உயர்த்துகிறது, தனியார் துறையில் பணிபுரியும் எமிராட்டிகளை ஆதரிக்க ஐக்கிய அரபு அமீரகத்தின் தொடர்ச்சியான முயற்சிகளை வலுப்படுத்துகிறது எனக் கூறப்பட்டுள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel