ADVERTISEMENT

UAE: அரசு ஊழியர்கள் அனைவருக்கும் 7 நாட்களுக்கு ஒரு முறை PCR டெஸ்ட் கட்டாயம்..!!

Published: 18 Jan 2021, 8:45 AM |
Updated: 18 Jan 2021, 8:53 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தின் அமைச்சகங்கள் மற்றும் மத்திய அரசு துறைகளில் பணிபுரியும் அனைத்து ஊழியர்களும் ஒவ்வொரு ஏழு நாட்களுக்கும் ஒருமுறை கொரோனாவிற்கான PCR சோதனை மேற்கொள்ள வேண்டும் என தற்பொழுது அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவுவதை தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாக அரசாங்க மனித வளத்திற்கான மத்திய ஆணையம் (Federal Authority for Government Human Resources) இன்று (திங்கள்கிழமை) அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

மேலும், கொரோனாவிற்கான தடுப்பூசியின் இரண்டு டோசினையும் (Doses) பெற்ற ஊழியர்களுக்கு இந்த PCR சோதனையில் இருந்து விலக்கு அளிக்கப்படுவதாகவும் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதற்கு முன்னதாக, அனைத்து மத்திய அரசு ஊழியர்களும் ஒவ்வொரு 14 நாட்களுக்கு ஒரு முறை தங்கள் சொந்த செலவில் PCR பரிசோதனை செய்ய வேண்டும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

ADVERTISEMENT

இருப்பினும், கொரோனா தடுப்பூசி எடுத்துக்கொள்ள முடியாத சுகாதார நிலைமைகள் உள்ள ஊழியர்களுக்கு எடுக்கப்படும் PCR பரிசோதனைக்காகன கட்டணத்தை அவர்கள் பணிபுரியும் நிறுவனமே ஏற்கும் என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்த புதிய நடவடிக்கைகள் தொற்றுநோயை நிவர்த்தி செய்வதிலும், அதன் பரவல் மற்றும் விளைவுகளை கட்டுப்படுத்துவதிலும், ஊழியர்களின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதிலும் ஐக்கிய அரபு அமீரக அரசாங்கத்தின் முயற்சிகளின் ஒரு பகுதியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இதற்கிடையில், நேற்று (ஞாயிற்றுக்கிழமை), ஷார்ஜா தனியார் கல்வி ஆணையம் (SPEA) திங்களன்று ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதன்படி, தனியார் பள்ளிகளின் ஆசிரியர்கள் மற்றும் பிற ஊழியர்களை 14 நாட்களுக்கு ஒருமுறை கொரோனா சோதனைக்கு உட்படுத்துமாறு கேட்டுக் கொண்டது குறிப்பிடத்தக்கது.