அபுதாபியில் கொரோனாவிற்கான தடுப்பூசியினை போட்டுக்கொண்ட குடியிருப்பாளர்களுக்கும், கொரோனாவிற்கான தடுப்பூசி சோதனைகளில் பங்கேற்றவர்களுக்கும் புதிய நெறிமுறைகளை அபுதாபியின் அவசரநிலை, நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மைக்குழு மற்றும் அபுதாபி சுகாதாரத் துறை தற்பொழுது அறிவித்துள்ளன.
அபுதாபியில் கொரோனாவிற்கான தடுப்பூசியினை எடுத்துக்கொண்டவர்களில் இரு பிரிவினர் உள்ளனர்.
- அமீரகத்தில் கொரோனா தடுப்பூசி சோதனைகளின் ஒரு பகுதியாக தடுப்பூசிகளைப் பெற்ற ஒரு பிரிவினர்.
- தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக தடுப்பூசி பெற்ற மற்றொரு பிரிவினர். ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் அதிகாரப்பூர்வமாக கொரோனா தடுப்பூசியினை நியமித்த பின்னர் இந்த தடுப்பூசி பிரச்சாரம் தொடங்கப்பட்டது.
சிறப்பு அடையாளம்
தேசிய தடுப்பூசி திட்டத்தின் ஒரு பகுதியாக COVID-19 தடுப்பூசியை எடுத்துக் கொண்ட குடியிருப்பாளர்கள் அல்ஹோஸ்ன் அப்ளிகேஷனில் தங்களது சிறப்பு அடையாள நிலையை (letter ‘E’) – இரண்டாவது டோஸினைப் பெற்ற 28 நாட்களுக்குப் பிறகு PCR பரிசோதனையை மேற்கொள்வதன் மூலம் பெறலாம். அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டிய அவசியமில்லை. ஆனால் தங்களின் சிறப்பு நிலையை தக்கவைத்துக்கொள்ள ஏழு நாட்களுக்கு ஒரு முறை PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
COVID-19 தடுப்பூசி சோதனைகளின் ஒரு பகுதியாக தடுப்பூசியை எடுத்துக் கொண்ட குடியிருப்பாளர்கள், அல்ஹோஸ்ன் பயன்பாட்டில் சிறப்பு அடையாள நிலையை (Golden Star) தடுப்பூசி சோதனையில் பரிந்துரைத்த அனைத்து டோஸ்களும் முடிந்த பின்னர் PCR சோதனையை மேற்கொள்வதன் மூலம் பெறலாம். இந்த சோதனைகளின் ஒரு பகுதியாக அவர்கள் வழக்கமான மருத்துவ பரிசோதனைகளுக்கு உட்படுத்தப்பட வேண்டும். மேலும் அவர்கள் தங்களின் சிறப்பு நிலையைத் தக்கவைக்க ஒவ்வொரு ஏழு நாட்களுக்கு ஒருமுறையும் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
அபுதாபிக்கு பயணம் மேற்கொள்பவர்கள்
தடுப்பூசி போட்டுக்கொண்ட நபர்கள் ‘green countries’ என அறிவிக்கப்பட்டிருக்கும் நாடுகளில் இருந்து அபுதாபிக்கு திரும்புபவர்கள் அபுதாபி வந்ததும் PCR சோதனை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் அவர்கள் அபுதாபி வந்த 6 வது நாளில் மற்றொரு PCR சோதனை மேற்கொள்ள வேண்டும். ஆனால் அவர்கள் தங்களை தனிமைப்படுத்தத் தேவையில்லை.
‘green countries’ சேர்க்கப்படாத நாடுகளில் இருந்து வருபவர்கள், அபுதாபி வந்தவுடன் ஒரு PCR பரிசோதனையும், 8-வது நாளில் மற்றொரு PCR பரிசோதனையும் மேற்கொள்ள வேண்டும். மேலும், அவர்கள் பத்து நாட்கள் தனிமைப்படுத்தலில் இருக்க வேண்டும்.
COVID-19 பாதித்தவருடன் தொடர்பில் இருந்தவர்கள்
தடுப்பூசி போட்ட நபர்கள் COVID-19 என கண்டறியப்பட்ட ஒருவருடன் தொடர்பு கொண்டால், அவர்கள் ஐந்து நாட்களுக்கு தங்களைத் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும் மற்றும் 4 ஆம் நாளில் PCR பரிசோதனை மேற்கொள்ள வேண்டும். அவர்கள் அந்த பரிசோதனையில் எதிர்மறை முடிவைப் பெற்றால் தனிமைப்படுத்தலை முடித்துக்கொள்ளலாம்.
Abu Dhabi Emergency, Crisis and Disasters Committee and Department of Health have approved screening protocols in Abu Dhabi for those vaccinated as part of the national vaccination programmes and volunteers in clinical trials of Covid-19 vaccines, effective 17 January. pic.twitter.com/QnluGvDGKl
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) January 17, 2021