ஷார்ஜாவில் பட்டப்பகலில் நடந்த ஒரு கார் திருட்டு சம்பவம், ஷார்ஜா காவல்துறையினரின் உடனடி நடவடிக்கைக்குப் பிறகு விரைவாக முடிவுக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக பகிரப்பட்ட விவரங்களின்படி, ஒரு குடியிருப்பாளர் தனது காரை சிறிது நேரம் நிறுத்திவிட்டு அருகிலுள்ள கடைக்குள் நுழைந்திருக்கிறார். அந்த வாகனத்தின் முன்பக்க ஜன்னல் பகுதியளவு திறந்த நிலையில் இருந்ததால், அடையாளம் தெரியாத ஒருவர் அதைக் கவனித்து, மெதுவாக காருக்குள் நுழைந்து, வேகமாக ஓட்டிச் சென்றதாகக் கூறப்படுகிறது.
உரிமையாளர் திரும்பி வந்து தனது கார் திருடப்பட்டதை உணர்ந்ததும், வாகனத்தைத் துரத்த முயன்றிருக்கிறார். ஆனால் அது அவரது பார்வையில் இருந்து மறைந்ததால் அதை நிறுத்த முடியவில்லை. இதையடுத்து அவர் உடனடியாக ஷார்ஜா காவல்துறையைத் தொடர்பு கொண்டு புகார் அளித்துள்ளார்.
புகார் கிடைத்ததும், அந்தப் பகுதிக்கு விரைந்து சென்ற காவல்துறையினர் அருகிலுள்ள கடைகளில் இருந்து CCTV காட்சிகளை மதிப்பாய்வு செய்யத் தொடங்கியுள்ளனர்.
அங்கிருந்த பாதுகாப்பு கேமராக்களில் சந்தேக நபரின் முகம், வாகனம் மற்றும் அது இயக்கப்பட்ட திசை உள்ளிட்டவை தெளிவாகப் பதிவாகியிருந்ததாகவும், இந்த ஆதாரத்தின் அடிப்படையில், காவல்துறையினர் காரின் எண் மற்றும் விளக்கத்தை மற்ற அதிகாரிகளுக்கு பகிர்ந்தனர்.
பல மணிநேர ஒருங்கிணைந்த பின்தொடர்தலுக்குப் பிறகு, அதிகாரிகள் ஒரு வெறிச்சோடிய பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த திருடப்பட்ட வாகனத்தைக் கண்டுபிடித்தனர். உடனடியாக அந்த இடத்தை சுற்றி வளைத்த அதிகாரிகள், சந்தேக நபரைக் கைது செய்து, வாகனத்தை அதன் உரிமையாளரிடம் பாதுகாப்பாக திருப்பி அனுப்பியுள்ளனர்.
இந்த சம்பவம் பின்னர் மீண்டும் நடித்துக் காட்டப்பட்டு, வாகனப் பாதுகாப்பு குறித்த பொதுமக்களின் விழிப்புணர்வை ஏற்படுத்த ஷார்ஜாவின் அல் தாயிதில் உள்ள ‘Alwousta TV’யில் ஒளிபரப்பட்டுள்ளது. இது எமிரேட்டின் விரைவான போலீஸ் நடவடிக்கை மற்றும் வலுவான கண்காணிப்பு வலையமைப்பை எடுத்துக்காட்டுகிறது.
عساكم على القوة .. سرق سيارة في الذيد وهكذا ضبطوه رجال الشرطة.#الشارقة_للأخبار #الإمارات #الشارقة pic.twitter.com/IiMWf7DNRw
— الشارقة للأخبار (@Sharjahnews) January 28, 2026
இத்தகைய சம்பவம் இருந்தபோதிலும், ஷார்ஜா தொடர்ந்து வாழ்வதற்கு பாதுகாப்பான இடங்களில் ஒன்றாகத் திகழ்கிறது. ஷார்ஜா காவல்துறையின் கூற்றுப்படி, 99.7 சதவீத குடியிருப்பாளர்கள் 2024 இல் பாதுகாப்பாக உணர்ந்ததாகக் கூறியுள்ளனர், அதே நேரத்தில் 97 சதவீதம் பேர் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையைப் பராமரிக்க சட்ட அமலாக்கத்தில் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர்.
மேலும், ஷார்ஜா காவல்துறையின் தலைமைத் தளபதி மேஜர் ஜெனரல் அப்துல்லா முபாரக் பின் அமர் அவர்கள், ஷார்ஜா முழுவதும் பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கும் உயர்தர பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் எமிரேட்டின் தலைமைத்துவம் மற்றும் முன்முயற்சியுடன் கூடிய காவல் உத்திகளைப் பாராட்டியுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel