ADVERTISEMENT

அமீரகத்தில் குறைந்த பெட்ரோல், டீசல் விலை.. பிப்ரவரி மாத விலைப்பட்டியல் வெளியீடு..

Published: 31 Jan 2026, 12:41 PM |
Updated: 31 Jan 2026, 12:41 PM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகம் ஜனவரி மாதம் இன்றுடன் முடிவடையும் நிலையில், பிப்ரவரி மாதத்திற்கான எரிபொருள் விலைகளை அரசு அறிவித்துள்ளது. ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது அனைத்து எரிபொருள் வகைகளிலும் விலைகள் குறைக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய விலைகள் பிப்ரவரி 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

பிப்ரவரி 2026க்கான எரிபொருள் விலைகள்

  • சூப்பர் 98: லிட்டருக்கு 2.45 திர்ஹம்ஸ் (ஜனவரியில் 2.53 திர்ஹம்ஸிலிருந்து குறைவு)
  • ஸ்பெஷல் 95: லிட்டருக்கு 2.33 திர்ஹம்ஸ் திர்ஹம்ஸ் (2.42 திர்ஹம்ஸிலிருந்து குறைவு)
  • E-Plus 91: லிட்டருக்கு 2.26 திர்ஹம்ஸ் (2.34 திர்ஹம்ஸிலிருந்து குறைவு)
  • டீசல்: லிட்டருக்கு 2.52 திர்ஹம்ஸ் (2.55 திர்ஹம்ஸிலிருந்து குறைவு)

டிசம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது ஜனவரியில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டிருந்தது, தற்போது பிப்ரவரி மாதத்திலும் விலை குறைக்கப்பட்டிருப்பது வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியை தந்துள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT