ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஊழியர்கள் அனைவரும் தங்களின் சம்பளம் மற்றும் தொழில் வாய்ப்புகளை மேம்படுத்துவதற்காக வேலைகளை மாற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாகவும், வாழ்க்கைச் செலவுகள் தொடர்ந்து ஏறிக்கொண்டே இருக்கும் போது சம்பளம் மாறாமல் இருப்பதே இதற்கு காரணம் என்றும் ஒரு புதிய ஆய்வு தெரிவிக்கிறது.
‘Fletcher Piccolo Associates’ என்ற நிறுவனத்தால் வெளியிடப்பட்ட சமீபத்திய GCC சம்பள வழிகாட்டியிலிருந்து இந்த தரவுகள் வந்துள்ளன, இது ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள 98 சதவீத ஊழியர்கள் 2026 இல் வேறு வேலைகளுக்கு மாற தயாராக உள்ளனர் என்பதைக் காட்டுகிறது. ஊழியர்களின் இந்தப் போக்கு, சிறந்த சம்பளம், தொழில் வளர்ச்சி மற்றும் அதிக அர்த்தமுள்ள மற்றும் அதிக தாக்கத்தை ஏற்படுத்தும் திட்டங்களுக்கான அணுகல் ஆகியவற்றால் தூண்டப்படுள்ளது என்றும் கூறப்படுகிறது.
“கிட்டத்தட்ட அனைத்து தொழில் வல்லுநர்களும் வேலையை மாற்றுவதற்குத் தயாராக இருக்கிறார்கள் என்பது பணவீக்கத்திற்கு மக்கள் எவ்வளவு வலுவாக பதிலளிக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது” என்று தொழில்துறை நிர்வாகிகள் குறிப்பிடுகின்றனர்.
இந்த ஆய்வறிக்கையில், 2025 இல், 82 சதவீத முதலாளிகள் சம்பளத்தை அதிகரிக்கவில்லை, அதே நேரத்தில் பாதிக்கும் மேற்பட்ட தொழில் வல்லுநர்கள் போனஸ் பெறவில்லை என்பதும் வெளிவந்துள்ளது. இந்நிலையில், அமீரகத்தில் சுமார் 35 சதவீத ஊழியர்கள், 2026ல் சிறந்த ஊதியத்தை எதிர்பார்க்கிறோம் என்று கூறியுள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரகம், சவூதி அரேபியா, ஓமன், பஹ்ரைன் மற்றும் கத்தார் ஆகிய நாடுகளில் உள்ள 2,300 -க்கும் மேற்பட்ட நிபுணர்களின் பதில்களின் அடிப்படையில் இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலை சந்தையில் உயர்வு இருந்தபோதிலும், 2026க்கான சம்பள வளர்ச்சி வளைகுடா முழுவதும் மிதமானதாகவே உள்ளதாகவும் அறிக்கைகள் கூறுகின்றன.
ஐக்கிய அரபு அமீரகத்தை பொறுத்தவரை மக்கள்தொகை வேகமாக வளர்ந்து வருவதால், வேலைவாய்ப்புகளானது, குறிப்பாக கட்டுமானம் மற்றும் ரியல் எஸ்டேட்டில் வலுவான திட்ட தேவையால் ஆதரிக்கப்படுகிறது.
இவ்வாறு சம்பள அழுத்தங்கள் இருந்தபோதிலும், அமீரகம் முழுவதும் உள்ள நிறுவனங்கள் தொடர்ந்து விரிவடைகின்றன. 40 சதவீத முதலாளிகள் கடந்த ஆண்டு 20 முதல் 30 சதவீதம் வரை பணியாளர்களை அதிகரித்துள்ளனர், மேலும், 41 சதவீதம் பேர் இந்த ஆண்டு குறைந்தபட்சம் 20 சதவீத பணியாளர்களை நியமிக்க திட்டமிட்டுள்ளதும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel