ADVERTISEMENT

ஈத் அல் எத்திஹாத்: பொதுத்துறை ஊழியர்களுக்கு மூன்று நாட்கள் விடுமுறை அறிவிப்பு!!

Published: 13 Nov 2026, 12:38 PM |
Updated: 13 Nov 2026, 12:38 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் 55-வது ‘ஈத் அல் எத்திஹாத்’ (தேசிய தினம்) கொண்டாட்டங்களை முன்னிட்டு, மத்திய அரசு ஊழியர்களுக்கு டிசம்பர் மாதம் ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கவுள்ளது. இதற்காக டிசம்பர் 2 முதல் 4 வரை மூன்று நாட்கள் அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ஐக்கிய அரபு அமீரக அரசு ஊடக அலுவலகத்தின் தகவல்படி, இந்த அதிகாரப்பூர்வ விடுமுறை 2026-ம் ஆண்டு டிசம்பர் 2, புதன்கிழமை முதல் டிசம்பர் 4, வெள்ளிக்கிழமை வரை அமலில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

இந்த விடுமுறை நாட்களைத் தொடர்ந்து சனி மற்றும் ஞாயிறு என வழக்கமான வார இறுதி நாட்கள் வருவதால், மத்திய அரசு ஊழியர்களுக்குத் தொடர்ந்து ஐந்து நாட்கள் விடுமுறை கிடைக்கும். அதன் பிறகு, மீண்டும் திங்கட்கிழமை, டிசம்பர் 7 அன்று அலுவலகப் பணிகள் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த விடுமுறை, 1971-ம் ஆண்டு டிசம்பர் 2-ம் தேதி ஐக்கிய அரபு அமீரகம் நிறுவப்பட்டதைக் குறிக்கும் ‘ஈத் அல் எத்திஹாத்’ தினத்துடன் இணைந்து வருகிறது. இந்த 55-வது ஆண்டு விழா, நாடு முழுவதும் பல்வேறு நிகழ்வுகள் மற்றும் செயல்பாடுகளுடன் கொண்டாடப்படவுள்ளது.

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel

ADVERTISEMENT