கொரோனா தடுப்பூசிக்கு உலகளவில் விநியோக நெருக்கடி இருப்பதால், கொரோனாவிற்கான ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசியின் முதல் டோசினை (dose) எடுக்க விரும்புவோருக்கான நியமனங்களை (appointment) மறுசீரமைப்பதாக துபாய் சுகாதார ஆணையம் (DHA) தற்பொழுது அறிவித்துள்ளது. இருப்பினும், ஏற்கனவே முதல் டோஸ் பெற்றவர்கள் மற்றும் இரண்டாவது டோசினைப் பெற காத்திருப்பவர்களுக்கு எந்த தடங்கலும் இருக்காது என்றும் DHA விளக்கமளித்துள்ளது.
DHA இது குறித்து தெரிவிக்கையில் தடுப்பூசிக்கான முதல் டோஸுக்கு முன்பதிவு செய்தவர்களுக்கு புதிய அப்பாயிண்ட்மெண்ட் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளது.
தடுப்பூசியின் முதல் டோஸிற்கான புதிய சந்திப்பை SMS மூலம் விரைவில் சுகாதார ஆணையம் தெரிவிக்கும் என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், தடுப்பூசிக்கு உலகளவில் கடும் விநியோக நெருக்கடி இருப்பதால், தடுப்பூசி உற்பத்தி நிறுவனமானது தடுப்பூசிக்கான உற்பத்தி திறனை விரிவாக்குவதை அறிவித்துள்ளதாக சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது.
அத்துடன், முதல் டோஸ் முடித்த நபர்கள் தடுப்பூசிக்கான இரண்டாவது டோஸ் எடுக்க வேண்டும் என்றும், அவர்கள் முன்பதிவு செய்த நேரத்தில் தடுப்பூசி மையத்திற்கு வந்து தடுப்பூசி சேவையை பெற்றுக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறார்கள் என்றும் DHA குடியிருப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
துபாயில் மட்டும் வழங்கப்பட்டு வரும் ஃபைசர்-பயோஎன்டெக் தடுப்பூசி 60 வயதுக்கு மேற்பட்ட துபாய் குடியிருப்பாளர்கள், நாட்பட்ட நோய்கள் உள்ளவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. மேலும், இந்த தடுப்பூசி பொது மற்றும் தனியார் துறைகளில் உள்ள முன்னணி சுகாதார ஊக்கியர்களுக்கும், முக்கிய துறைகளில் உள்ளவர்களுக்கும் வழங்கப்படுகிறது.
அதுதவிர அமீரகம் முழுவதும் கொரோனாவிற்கெதிராக சினோபார்ம் தடுப்பூசியும் இலவசமாக குடியிருப்பாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகிறது. அத்துடன் தற்பொழுது மூன்றாவது தடுப்பூசியாக ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியை அவசர கால பயன்பாட்டிற்கு அமீரக அரசு அங்கீகரித்ததும் குறிப்பிடத்தக்கது.
DHA is working on rescheduling the 1st dose of the COVID-19 Pfizer-BioNTech vaccine. Kindly note that the manufacturer has announced the expansion of the vaccine production capacity, which has temporarily affected several countries globally. pic.twitter.com/o3Bknk39uU
— هيئة الصحة بدبي (@DHA_Dubai) January 23, 2021