ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள துபாய் அரசின் சுகாதார ஆணையமானது தற்பொழுது செவிலியர்களுக்கான (nurses) காலியிடங்கள் இருப்பதாக அறிவித்துள்ளது. அதனைத் தொடர்ந்து துபாய் சுகாதார ஆணையம் செவிலியர்களுக்கான வேலைவாய்ப்பை வழங்கவிருக்கின்றது.
சுகாதார ஆணையம் சமூக ஊடகத்தில் வெளியிட்ட செய்தியில், மூன்று மாத ஒப்பந்தத்தில் வேலை செய்வதற்காக செவிலியர்களுக்கான விண்ணப்பங்களை பரிசீலித்து வருவதாக தெரிவித்துள்ளது. இந்த மூன்று மாத ஒப்பந்தமானது மேலும் நீடிக்கப்பட வாய்ப்பிருப்பதாகவும் சுகாதார ஆணையம் கூறியுள்ளது.
இந்த வேலைக்கு தேர்ந்தெடுக்கப்படும் நபர்களுக்கு மாதத்திற்கு 8,000 திர்ஹம் வரை சம்பளம் கிடைக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இந்த வேலைக்கு சேர விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் விண்ணப்பங்களை HRRecruitment@dha.gov.ae என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்புமாறு அறிவுறுத்தப்படுவதாக சுகாதார ஆணையம் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
DHA is hiring #Nurses for a three months contract, which can be extended. To apply kindly send an email to
HRRecruitment@dha.gov.ae pic.twitter.com/BS9Jg5sdph— هيئة الصحة بدبي (@DHA_Dubai) January 26, 2021