ADVERTISEMENT

சவூதியில் தென்பட்டது பிறை.. நாளை முதல் துவங்கும் ரமலான்.. அறிவிப்பை வெளியிட்ட சவூதி..!!

Published: 17 Feb 2026, 6:57 PM |
Updated: 17 Feb 2026, 6:57 PM |
Posted By: admin

சவூதி அரேபியாவில் இன்று (பிப்ரவரி 17) செவ்வாய்க்கிழமை ரமலான் மாத பிறையை பார்க்குமாறு அதிகாரிகள் கேட்டுக்கொண்ட நிலையில் இன்று பிறை தென்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று ஷபான் மாதத்தின் கடைசி நாள் என்றும் நாளை பிப்ரவரி 18-ம் தேதி (புதன்) ரமலான் மாதத்தின் முதல் நாளாக இருக்கும் என்றும் சவூதி அரேபியாவின் பிறை பார்க்கும் கமிட்டி தெரிவித்துள்ளது.

ADVERTISEMENT

பொதுவாக இஸ்லாமிய மாதங்கள் 29 அல்லது 30 நாட்கள் நீடிக்கும். ரமலான் இஸ்லாமிய நாட்காட்டியில் ஒன்பதாவது மாதம் ஆகும். இருப்பினும் இது பிறை பார்ப்பதின் அடிப்படையிலேயே உறுதி செய்யப்படும்.

ஐக்கிய அரபு அமீரகம் உட்பட வளைகுடா நாடுகள் சவூதி அரேபியாவையே பின்பற்றும் என்பதால் அமீரகம், குவைத், கத்தார், பஹ்ரைன் ஆகிய நாடுகளும் நாளை ரமலான் முதல் நாளாக விரைவில் அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதே நேரத்தில் ஓமான் பிப்ரவரி 19 ம் தேதி ரமலான் முதல் நாள் என ஏற்கெனவே அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT