ADVERTISEMENT

வெளிநாட்டவர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையை வழங்கும் புதிய சட்டம்..!! துபாய் ஆட்சியாளர் அறிவிப்பு..!!

Published: 30 Jan 2021, 10:21 AM |
Updated: 30 Jan 2021, 10:28 AM |
Posted By: admin

ஐக்கிய அரபு அமீரகத்தில் வெளிநாடுகளை சேர்ந்த முதலீட்டாளர்கள், சிறப்புத் திறமைகள் மற்றும் தொழில் வல்லுநர்களுக்கு ஐக்கிய அரபு அமீரக குடியுரிமையை வழங்க அனுமதிக்கும் சட்டத் திருத்தங்களை அமீரக அரசு ஏற்று கொண்டுள்ளது. அமீரக அரசு குடியுரிமை வழங்கவிருக்கும் தொழில் வல்லுனர்களில் விஞ்ஞானிகள், மருத்துவர்கள், பொறியாளர்கள், கலைஞர்கள், ஆசிரியர்கள் மற்றும் அவர்களது குடும்பங்கள் ஆகியோர் அடங்குவர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

இந்த வரலாற்று சிறப்புமிக்க புதிய சட்ட திருத்தம் குறித்த அறிவிப்பை ஐக்கிய அரபு அமீரகத்தின் துணைத் தலைவரும் பிரதமரும் துபாய் ஆட்சியாளருமான ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்தூம் அவர்கள் இன்று சனிக்கிழமை அறிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்திருப்பதாவது “புதிய வழிமுறைகள் எங்கள் வளர்ச்சி பயணத்திற்கு பங்களிக்கும் திறமைகளை ஈர்ப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளன” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.


மேலும் தனது ட்வீட்டில் ஐக்கிய அரபு அமீரக அமைச்சரவை, உள்ளூர் எமிரி நீதிமன்றங்கள் (local Emiri courts) மற்றும் நிர்வாக சபைகள் ஐக்கிய அரபு அமீரக குடியுரிமைக்கு தகுதியானவர்களை “ஒவ்வொரு பிரிவிற்கும் நிர்ணயிக்கப்பட்ட தெளிவான அளவுகோல்களின் கீழ்” பரிந்துரைக்கும் என்றும் இந்த புதிய சட்ட நடைமுறை குறித்து அவர் விளக்கியுள்ளார்.

ADVERTISEMENT


மேலும் ஐக்கிய அரபு அமீரக பாஸ்போர்ட்டைப் பெறும் வெளிநாட்டவர்களுக்கு அவர்களின் தற்போதைய குடியுரிமையை தொடர்ந்து வைத்திருக்கவும் இந்த புதிய சட்டம் அனுமதிக்கிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.