ஐக்கிய அரபு அமீரகம் பிப்ரவரி மாதம் இன்றுடன் முடிவடையும் நிலையில், மார்ச் மாதத்திற்கான எரிபொருள் விலைகளை அரசு அறிவித்துள்ளது. பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும்போது அனைத்து எரிபொருள் வகைகளிலும் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன என்று அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். புதிய விலைகள் மார்ச் 1, 2026 முதல் அமலுக்கு வரும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மார்ச் 2026க்கான எரிபொருள் விலைகள்
- சூப்பர் 98: லிட்டருக்கு 2.59 திர்ஹம்ஸ் (பிப்ரவரியில் 2.45 திர்ஹம்ஸாக இருந்தது)
- ஸ்பெஷல் 95: லிட்டருக்கு 2.48 திர்ஹம்ஸ் திர்ஹம்ஸ் (2.33 திர்ஹம்ஸிலிருந்து அதிகரிப்பு )
- E-Plus 91: லிட்டருக்கு 2.40 திர்ஹம்ஸ் (2.26 திர்ஹம்ஸிலிருந்து உயர்வு)
- டீசல்: லிட்டருக்கு 2.72 திர்ஹம்ஸ் (2.52 திர்ஹம்ஸிலிருந்து உயர்வு)
ஜனவரி மாதத்துடன் ஒப்பிடும்போது பிப்ரவரியில் எரிபொருள் விலைகள் குறைக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது மார்ச் மாதத்தில் விலை உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel