கடந்த 15 ஆண்டுகளாக ஒவ்வொரு மாதமும் டிக்கெட் வாங்கி வரும் ஷார்ஜாவைச் சேர்ந்த பிக்அப் டிரைவர் ஒருவருக்கு சமீபத்திய டிராவில் 15 மில்லியன் திர்ஹம் பிக் டிக்கெட் ஜாக்பாட் அடித்துள்ளது. இந்தியாவை சேர்ந்த விபீஷ் பள்ளியாலி (Vibeesh Palliyali) என்பவர் வாங்கிய கடைசி நிமிட டிக்கெட்டின் மூலம் இந்த மாபெரும் பரிசை வென்றுள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஒரு போக்குவரத்து நிறுவனத்தில் பிக்அப் டிரைவராகப் பணியாற்றி வரும் விபீஷ், பிப்ரவரி மாத தொடக்கத்தில் இந்தியாவுக்குப் பயணம் செய்யும் போது ஏற்கனவே ஒரு செட் டிக்கெட்டுகளை வாங்கியதாகவும் . அதன் பிறகு, பிப்ரவரி 28 அன்று, அவரது உறவினரும் இரண்டு நண்பர்களும் தங்களுடன் மற்றொரு டிக்கெட்டை வாங்கும்படி அவரை வற்புறுத்தியதாகவும், மாதாந்திர பட்ஜெட் காரணமாக ஆரம்பத்தில் தயங்கினாலும், இறுதியில் இரவு 8 மணிக்கு ஆன்லைனில் டிக்கெட்டை வாங்கியதாகவும் அவர் தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த டிக்கெட் வெற்றி பெற்ற டிக்கெட்டாக மாறியுள்ளது.
புதன்கிழமை மாலை, அபுதாபியிலிருந்து ஷார்ஜாவில் உள்ள தனது வீட்டிற்கு காரில் திரும்பிச் செல்லும்போது, விபீஷுக்கு பிக் டிக்கெட்டிலிருந்து ஒரு அழைப்பு வந்த போது, முதலில், இது ஒரு வழக்கமான விளம்பர அழைப்பு என்று நினைத்திருக்கிறார். அவரது வெற்றி குறித்து தெரிவிக்கப்பட்டபோது, அவர் வாயடைத்துப் போனதாகவும், இது ஒரு குறும்பு அழைப்பு (prank call) என்று எண்ணியதாகவும் விபீஷ் தெரிவித்துள்ளார். பின்னர், அவரது மனைவி ரெஸ்னா விரைவாக ஆன்லைனில் சரிபார்த்து, வெற்றியாளராக அவரது பெயர் பட்டியலிடப்பட்டுள்ளதை உறுதிப்படுத்தியதாகவும் அவர் கூறியுள்ளார்.
ஷார்ஜாவில் தனது மனைவி ரெஸ்னா மற்றும் மகள் வந்தனாவுடன் வசிக்கும் விபீஷுக்கு, இந்த வெற்றி 15 வருட தொடர் முயற்சியின் முடிவில் இந்த வெற்றி கிடைத்துள்ளது. இது குறித்து அவர் கூறுகையில், ஒரு ஓட்டுநராக, மாதத்திற்கு தவறாமல் 1,000 திர்ஹம் ஒதுக்குவது கடினம் என்று தெரிவித்துள்ளார்.
மேலும் அவரது மனைவி அடிக்கடி டிக்கெட் வாங்கும் செலவைப் பற்றி கேள்வி எழுப்பியதால், சில மாதங்களில், டிக்கெட் வாங்கியதை அவரிடம் கூட வாங்கியதை என்று விபீஷ் கூறுகிறார். அவர் ஒருபோதும் டிராக்களை நேரலையில் பார்த்ததில்லை, மேலும் வெற்றியை எதிர்பார்ப்பதற்குப் பதிலாக டிக்கெட் வாங்குவதை ஒரு பழக்கமாகக் கருதினார். அவரது ஒரே ஆசை ஒரு நாள் ஏதாவது ஒன்றை வெல்ல வேண்டும், அது 100,000 திர்ஹம் சிறிய பரிசாக இருந்தாலும் கூட சரிதான் என இருந்திருக்கிறார்.
இந்நிலையில் அவருக்கு 15 மில்லியன் திர்ஹம்ஸ் கிடந்துள்ளது. இப்போது வென்ற 15 மில்லியன் திர்ஹம் பரிசு நான்கு வெற்றியாளர்களிடையே பகிர்ந்து கொள்ளப்படுகிறது, இதன் மூலம் விபீஷுக்கு 4 மில்லியன் திர்ஹம்ஸ்க்கும் குறைவான பரிசுத் தொகை கிடைக்கும். ஐக்கிய அரபு அமீரகத்தில் 20 ஆண்டுகள் பணியாற்றிய அவர் இப்போது பரிசுத் தொகை மூலம் இந்தியாவிற்கு திரும்ப திட்டமிட்டுள்ளார். ஷார்ஜாவில் பள்ளிப் படிப்பை முடித்த பிறகு பெங்களூரில் வணிக நிர்வாகம் படிக்கும் தனது மகள் வந்தனாவின் எதிர்காலத்தைப் பாதுகாக்கவும், அவரது வாழ்க்கையைப் பாதுகாக்கவும் பணத்தைப் பயன்படுத்தப் போவதாக கூறியுள்ளார்.
இப்போதைக்கு, அவர் தனது குடும்பத்தின் எதிர்காலத்தை உறுதி செய்வதிலும், வாழ்க்கையில் ஒரு புதிய அத்தியாயத்திற்குத் தயாராவதிலும் கவனம் செலுத்தவிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel