ADVERTISEMENT

GCC நாடுகளில் சிக்கித் தவிக்கும் அமீரகக் குடியிருப்பாளர்களுக்கு 15Gb இலவச டேட்டாவை அறிவித்த du!!

Published: 5 Mar 2026, 7:24 PM |
Updated: 5 Mar 2026, 7:30 PM |
Posted By: Menaka

ஐக்கிய அரபு அமீரகத்தின் தொலைத்தொடர்பு ஆபரேட்டரான du நிறுவனமானது, மத்தியக்கிழக்கில் நிலவும் புவிசார் பதட்டங்களுக்கு மத்தியில் அறிவிக்கப்பட்ட விமான ரத்துகள் காரணமாக அமீரகத்திற்கு வெளியே சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு உதவ முன்வந்துள்ளது, இலவச 15 ஜிபி ரோமிங் டேட்டா, வரம்பற்ற வெளிச்செல்லும் அழைப்புகள் (unlimited outgoing calls) மற்றும் 500 உள்வரும் நிமிடங்கள் (incoming minutes) என்ற சிறப்பு மூன்று நாள் பேக்கேஜை நிறுவனம் அறிவித்துள்ளது.

ADVERTISEMENT

வியாழக்கிழமை செயல்படுத்தப்பட்ட இந்த சலுகை, வளைகுடா ஒத்துழைப்பு கவுன்சில் (GCC) பிராந்தியம் முழுவதும் உள்ள du வாடிக்கையாளர்களுக்கு பொருந்தும், இது பயண இடையூறுகளில் சிக்கியவர்களுக்கு தடையற்ற இணைப்பை உறுதி செய்கிறது.

அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான இராணுவ மோதல்கள் போக்குவரத்து மற்றும் தகவல் தொடர்பு குறித்த கவலைகளை எழுப்பியுள்ள நிலையில், பிராந்திய பதட்டங்கள் அதிகரித்து வரும் நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. இதனையடுத்து புதன்கிழமை, du நிறுவனம் தனது செயல்பாட்டு தயார்நிலை குறித்து வாடிக்கையாளர்களுக்கு உறுதியளித்துள்ளது, அதில் அதன் உள்கட்டமைப்பு மற்றும் முக்கிய அமைப்புகள் முழுமையாக செயல்படுகின்றன என்பதை உறுதிப்படுத்தியது.

ADVERTISEMENT

இது குறித்து du இன் தலைமை நிர்வாக அதிகாரி ஃபஹத் அல் ஹசாவி அவர்கள் பேசுகையில், “எங்கள் முன்னுரிமை தடையற்ற இணைப்பை உறுதி செய்வதிலும், எங்கள் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதிலும் எங்கள் செயல்பாடுகளின் மீள்தன்மையை பராமரிப்பதிலும் உள்ளது. நாங்கள் முக்கியமான தேசிய உள்கட்டமைப்பை இயக்குகிறோம், மேலும் அமீரக பொருளாதாரத்தில் எங்கள் பங்கு மிகவும் தெளிவாக உள்ளது,” என்று தெரிவித்துள்ளார்..

வெளிநாடுகளில் சிக்கித் தவிக்கும் குடியிருப்பாளர்களுக்கு, இந்த அவசர நடவடிக்கை ஒரு ஆதரவை வழங்குகிறது, இக்கட்டான காலகட்டத்தில் அவர்களை குடும்பம், முதலாளிகள் மற்றும் அத்தியாவசிய சேவைகளுடன் இணைந்திருக்க வைக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT

இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel