ஒரு சிறிய இடைநிறுத்தத்திற்குப் பிறகு எமிரேட்ஸ் மீண்டும் செயல்பாடுகளைத் தொடங்குவதாக தற்பொழுது மீண்டும் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி இன்று (மார்ச் 7) பிற்பகல் விமானங்களுக்கு உறுதிப்படுத்தப்பட்ட முன்பதிவுகளைக் கொண்ட பயணிகள், துபாய் வழியாகச் செல்லும் விமானங்கள் உட்பட, அவர்களின் டிரான்சிட் விமானமும் இயக்கப்படும் பட்சத்தில் விமான நிலையத்திற்குச் செல்லலாம் என கூறப்பட்டுள்ளது.
மேலும் பயணிகள் மற்றும் பணியாளர்களின் பாதுகாப்பே அதன் மிக உயர்ந்த முன்னுரிமையாக உள்ளது என்றும் விமான நிறுவனம் வலியுறுத்தியுள்ளது..
விமான சேவையை தற்காலிகமாக நிறுத்தி வைத்த எமிரேட்ஸ்
சனிக்கிழமை முன்னதாக, விமான நிறுவனங்கள் தங்கள் சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்து, பயணிகள் விமான நிலையத்திற்கு செல்ல வேண்டாம் என்று நிறுவனம் அறிவித்திருந்தது. மேலும் அவ்வப்போது புதுப்பிப்புகளைப் பகிர்ந்து கொள்வதாகவும் விமான நிறுவனம் கூறியிருந்தது.
அதே போல் பிப்ரவரி 28 முதல் மார்ச் 31 வரை பயணிக்க முன்பதிவு செய்த வாடிக்கையாளர்கள் என்ன செய்ய வேண்டும் என்பதையும் விமான நிறுவனம் பட்டியலிட்டுள்ளது.
மறு முன்பதிவு
விமான சேவையால் பாதிக்கப்பட்டவர்கள் ஏப்ரல் 30 அல்லது அதற்கு முன் பயணத்திற்காக நீங்கள் விரும்பிய இடத்திற்கு மற்றொரு விமானத்தில் மீண்டும் முன்பதிவு செய்யலாம். நீங்கள் ஒரு பயண முகவரிடம் உங்கள் விமானத்தை முன்பதிவு செய்திருந்தால், நீங்கள் அவர்களைத் தொடர்பு கொள்ள வேண்டும். நீங்கள் விமான நிறுவனத்திடம் நேரடியாக முன்பதிவு செய்திருந்தால், http://emirat.es/support இல் தொடர்பு கொள்ளவும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான கோரிக்கை
விமான நிறுவனத்திடம் நேரடியாக முன்பதிவு செய்திருந்தால் http://emirat.es/refund இல் பணத்தைத் திரும்பப் பெறுவதற்கான படிவத்தை நிரப்புவதன் மூலம் டிக்கெட் கட்டணத்தை திரும்பப் பெறக் கோரலாம். நீங்கள் ஒரு பயண முகவரிடம் உங்கள் விமானங்களை முன்பதிவு செய்திருந்தால், தயவுசெய்து அவர்களைத் தொடர்பு கொள்ளவும்.
மேலும் புதுப்பிப்புகளைப் பெற http://emirat.es/managebooking ஐப் பார்வையிடுவதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்கள் தொடர்பு விவரங்கள் சரியாக இருப்பதை உறுதிசெய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
அத்துடன் துபாய் முழுவதும் உள்ள அனைத்து சிட்டி செக்-இன் சென்டர்களும் மறு அறிவிப்பு வரும் வரை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது