ரமலான் நிறைவடைய சில நாட்களே உள்ள நிலையில், துபாய் ஃபெஸ்டிவல் சிட்டி மால் குடும்பங்கள் மற்றும் நண்பர்களுக்கான தொடர்ச்சியான ஷாப்பிங் சலுகைகள், உணவு அனுபவங்கள் மற்றும் கலாச்சார நடவடிக்கைகளை வழங்குகிறது.
இந்த கொண்டாட்டங்கள் ஐக்கிய அரபு அமீரகத்தின் ‘ Year of Family’ மற்றும் ‘Season of Wulfa’ ஆகியவற்றின் ஒரு பகுதியாகும், இது புனித மாதத்தில் மக்கள் ஒன்றாக தரமான நேரத்தை செலவிட ஊக்குவிப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
மார்ச் 12 முதல் 15 வரை நடைபெறும் பிரபலமான 3-நாள் சூப்பர் சேலில், மால் மற்றும் ஃபெஸ்டிவல் பிளாசா பங்கேற்கும், அங்குள்ள கடைகள் 90 சதவீதம் வரை தள்ளுபடிகளை வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பார்வையாளர்கள் சிறப்பு உணவக சலுகைகளையும் அனுபவிக்கலாம் மற்றும் பங்கேற்கும் பிராண்டுகளில் ஈத் அல் பித்ர் பரிசுகளைப் பெறலாம் என்று கூறப்பட்டுள்ளது
இந்த ப்ரோமோஷன் வாடிக்கையாளர்களுக்கு மாலின் பரந்த அளவிலான விற்பனைக் கடைகளை ஆராய்வதற்கான வாய்ப்பை வழங்குகிறது என்றும், பருவகால சலுகைகள் மற்றும் பிரத்யேக சலுகைகளிலிருந்து பயனடைவதாகவும் ஏற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
கூடுதலாக, ரமலான் கருப்பொருள் பொழுதுபோக்கு மார்ச் 23 வரை தினசரி இரவு 8 மணி முதல் நள்ளிரவு வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது, இதில் பல்வேறு கலாச்சார நிகழ்ச்சிகள் இடம்பெறும். இசை நிகழ்ச்சிகள், குழந்தைகளுக்கான கதை சொல்லும் அமர்வுகள், நேரடி அரபு காலிகிராபி (Arabic calligraphy) மற்றும் வீணை இசை (harp music) ஆகியவை இதில் அடங்கும்.
மேற்கூறியவாறு முக்கிய ஷாப்பிங் தள்ளுபடிகள், கலாச்சார நடவடிக்கைகள் மற்றும் குடும்ப நட்பு பொழுதுபோக்குகளுடன், ஈத் அல் பித்ர் கொண்டாட்டங்கள் தொடங்குவதற்கு முன் ரமலானின் இறுதி நாட்களை அனுபவிக்க குடியிருப்பாளர்களுக்கு ஒரு சிறந்த இடத்தை மால் நிர்வாகம் வழங்குகிறது.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel