துபாயில் உள்ள சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA), ஈத் அல் ஃபித்ர் விடுமுறைக் காலத்தில் நகரத்தில் உள்ள அனைத்துப் பொது வாகன நிறுத்தங்களும் இலவசமாக இருக்கும் என்று அறிவித்துள்ளது
இது தொடர்பாக ஆணையம் வெளியிட்ட அறிவிப்பின்படி, இந்தச் சலுகையானது ஈத் அல் ஃபித்ர் விடுமுறையின் முதல் நாளில் தொடங்கி, விடுமுறையின் மூன்றாம் நாள் முடியும் வரை நீடிக்கும் மற்றும் நகரம் முழுவதும் உள்ள அனைத்துப் பொது பார்க்கிங் மண்டலங்களுக்கும் பொருந்தும் என்பது தெரிய வந்துள்ளது. ஆனால், மல்டி லெவல் வாகன நிறுத்த இடங்களுக்கு இது பொருந்தாது, அங்கு வழக்கமான கட்டணங்கள் தொடர்ந்து வசூலிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும், ஈத் விடுமுறையின் நான்காம் நாளில் இருந்து வழக்கமான பார்க்கிங் கட்டணங்கள் மீண்டும் அமலுக்கு வரும் என்றும் RTA கூடுதலாகத் தெரிவித்துள்ளது.
இஸ்லாமிய நாட்காட்டியில் மாதங்களின் தொடக்கத்தைத் தீர்மானிக்கும் பிறை தென்படுவதைப் பொறுத்து, ஈத் அல் ஃபித்ர் பண்டிகையானது வியாழன், மார்ச் 19 அல்லது வெள்ளி, மார்ச் 20 ஆகிய தேதிகளில் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மெட்ரோ மற்றும் டிராம் இயக்க நேரங்கள்
விடுமுறைக் காலத்தில் பொதுப் போக்குவரத்திற்கான மாற்றியமைக்கப்பட்ட இயக்க அட்டவணைகளையும் RTA அறிவித்துள்ளது.
அதன்படி, துபாய் மெட்ரோவின் ரெட் மற்றும் க்ரீன் வழித்தடங்கள் பின்வருமாறு இயங்கும்:
- மார்ச் 18 முதல் மார்ச் 21 வரை: அதிகாலை 5:00 மணி – மறுநாள் அதிகாலை 1:00 மணி வரை
- மார்ச் 22 அன்று: காலை 8:00 மணி – மறுநாள் அதிகாலை 1:00 மணி வரை
இதற்கிடையில், துபாய் டிராம் பின்வரும் அட்டவணையின்படி இயங்கும்:
- புதன் முதல் சனி வரை: காலை 6:00 மணி – மறுநாள் அதிகாலை 1:00 மணி வரை
- ஞாயிறு அன்று: காலை 9:00 மணி – மறுநாள் அதிகாலை 1:00 மணி வரை
பேருந்து சேவை மாற்றங்கள்
அதேபோல், சில பேருந்து வழித்தடங்களில் செய்யப்பட்டுள்ள தற்காலிக மாற்றங்களை பயணிகள் கவனத்தில் கொள்ள வேண்டும்:
- ரூட் E100 ஆனது, மார்ச் 18 பிற்பகல் முதல் மார்ச் 22 வரை அல் குபைபா பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படாது. இதற்கு மாற்றாக, பயணிகள் ரூட் E101-ஐப் பயன்படுத்தலாம் இது இப்ன் பத்தூதா பேருந்து நிலையம் மற்றும் அபுதாபி ஆகியவற்றுக்கு இடையே இயங்கும்.
- ரூட் E102 ஆனது, மார்ச் 19 முதல் மார்ச் 22, 2026 வரை அல் ஜஃபிலியா பேருந்து நிலையம் மற்றும் முசஃபா ஆகியவற்றுக்கு இடையே இயங்கும்.
வாகனப் பரிசோதனை மையங்கள்
துபாயில் உள்ள வாகனத் தொழில்நுட்பப் பரிசோதனை மையங்கள், ஈத் விடுமுறையை முன்னிட்டு மார்ச் 19 முதல் மார்ச் 21 வரை மூடப்பட்டிருக்கும். பின்வரும் பல மையங்களில், ஞாயிற்றுக்கிழமை முதல் சேவைகள் மீண்டும் தொடங்கும்:
- தஸ்ஜீல் அல் த்வார் (Tasjeel Al Twar)
- ஆட்டோப்ரோ அல் மன்கூல் (AutoPro Al Mankhool)
- தஸ்ஜீல் அல் அவீர் (Tasjeel Al Awir)
- தஸ்ஜீல் டிஸ்கவரி கார்டன்ஸ் (Tasjeel Discovery Gardens)
- அல் யலாயிஸ் (Al Yalayis)
- ஷாமில் அல் முஹைஸ்னா (Shamil Al Muhaisnah)
- அல் முத்தகாமிளா அல் குவோஸ் (Al Mutakamela Al Quoz)
- ஷாமில் நாத் அல் ஹமர் (Shamil Nad Al Hamar)
மேலும், ரமலான் மாதம் 30 நாட்கள் முழுமையடைந்தால், சேவை வழங்கும் மையங்கள் உட்பட, ஈத் விடுமுறையானது ஞாயிறு, மார்ச் 22 வரை நீட்டிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்
RTA-வின் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்களும் ஈத் விடுமுறையின் போது மூடப்பட்டிருக்கும். இருப்பினும், பின்வருவன தொடர்ந்து 24 மணி நேரமும் இயங்கும்:
- உம் ரமூலில் உள்ள வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையம்
- தேராவில் உள்ள ஸ்மார்ட் வாடிக்கையாளர் மகிழ்ச்சி மையங்கள்
- அல் பர்ஷா
- அல் த்வார்
- அல் கிஃபாஃப்
- RTA தலைமை அலுவலகம்
பண்டிகை விடுமுறைக்காலத்தில், குடியிருப்பாளர்களும் பார்வையாளர்களும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளைச் சரிபார்த்து, தங்கள் பயணங்களை முன்கூட்டியே திட்டமிடுமாறு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.
இது போன்ற அமீரகத்தின் முக்கிய செய்திகள் மற்றும் அன்றாட தகவல்களை அறிந்து கொள்ள எங்களின் Khaleej Tamil வாட்ஸ்அப் சேனலில் இணைந்து கொள்ளுங்கள்.
Link: Khaleej Tamil WhatsApp Channel