அபுதாபியில் மக்களின் பயன்பாட்டிற்காக புதியதாக திறக்கப்பட்டுள்ள ” மர்ஸா மினா வாட்டர்ஃபிரன்ட் “

அபுதாபியில் ஒரு புதிய பொழுதுபோக்கு இடமாக சையது போர்ட்டில் “மர்ஸா மினா” தற்பொழுது திறக்கப்பட்டுள்ளது.
இது துறைமுகத்துக்கு வரும் சர்வதேச பயணிகளைக் கவரும் வண்ணமும் இங்குள்ள மக்களுக்கு ஒரு சிறந்த பொழுதுபோக்கு இடமாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது.இங்கு பல கடைகள், உணவகங்கள் மற்றும் பல பொழுதுபோக்கு அம்சங்கள் மக்களைக் கவரும் வண்ணம் கொண்டு வரப்பட்டுள்ளன..
அபுதாபியில் க்ரூஸ் டெர்மினலின் பின்னணியில் உள்ள மர்ஸா மினா க்ரூஸ் ஷிப் பயணிகளை அமீரகத்திற்கு வந்த பின் வரவேற்கும் முதல் முக்கிய இடமாகும்.
இதனைப் பற்றி அபுதாபி துறைமுகக்குழுமத்தின் தலைமை அதிகாரி முஹம்மது ஜுமா அல்ஜமிஷி கூறியதாவது: க்ரூஸ் பயணத்திற்குக் கூடுதல் உற்சாகத்தை அளிக்கும் வகையில் மர்ஸா மினா இருக்கும் எனக் கூறியுள்ளார். மேலும் இது பற்றிக் கூறுகையில்,சையது துறைமுகத்தை அமீரக மக்களுக்கும் கப்பல் பயணிகளுக்கும் ஒரு தனித்துவமான பொழுதுபோக்கு அடையாளமாக மாற்றுவதற்கான தங்களின் உறுதிப்பாட்டைக் குறிப்பதாகவும் கூறியுள்ளார்.