துபாயில் போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத்தொகை தள்ளுபடி செய்யும் திட்டம் மேலும் ஒரு வருடம் நீட்டிப்பு!!!

துபாயில் கடந்த வருடம் அமல்படுத்தப்பட்ட போக்குவரத்து விதிமீறல்களுக்கான அபராதத் தொகையை தள்ளுபடி செய்யும் திட்டம் பிப்ரவரி மாதம் முடிவடைந்த நிலையில் தற்பொழுது இந்த திட்டத்தை மேலும் ஒரு வருடம் நீட்டிக்கப் போவதாக துபாய் காவல்துறை அறிவித்துள்ளது. இதனடிப்படையில் ஏற்கெனவே போக்குவரத்து விதிகளை மீறி வாகனம் ஓட்டி அபராதம் பெற்றவர்கள் இத்திட்டத்தின் கீழ் தள்ளுபடி பெறலாம். ஏற்கெனவே அபராதம் பெற்றவர்கள் முறையாக விதிகளைப் பின்பற்றி வாகனம் ஓட்டுவார்களேயானால், அவர்களுடைய அபராதத் தொகையானது கால இடைவெளி அடிப்படையில் தள்ளுபடி செய்யப்படுகின்றது.
இத்திட்டத்தின்படி, ஓட்டுனர்கள் விதிகளை மீறாமல் தொடர்ந்து 3 மாதம் வாகனம் ஓட்டினால் 25% தள்ளுபடியும் 6 மாதம் ஓட்டினால் 50% தள்ளுபடியும் 9 மாதம் ஓட்டினால் 75% தள்ளுபடியும் ஒரு வருடம் எவ்வித விதிகளையும் மீறாமல் ஓட்டினால் 100% தள்ளுபடியும் பெறலாம்.
கடந்த வருடம் கடைப்பிடிக்கப்பட்ட இந்த திட்டத்தினால் 557,430
ஓட்டுனர்கள் பயனடைந்துள்ளனர். இதில் ஆண்கள் 114,769 பேரும் பெண்கள் 444,661 பேரும் அடங்குவர்.