தமிழகத்தில் அனைத்து மாவட்ட எல்லைகளுக்கும் சீல்..!!! நாளை முதல் 144 தடை உத்தரவு அமல்..!!!
இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவலைத் தொடர்ந்து பல்வேறு தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரையிலும், 400 க்கும் மேலான மக்கள் இந்தியாவில் கொரோனாவால் பாதிப்படைந்துள்ளனர். மேலும், கொரோனா பரவாமல் தடுக்க இந்திய அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து வரும் பட்சத்தில், தற்பொழுது தமிழக அரசு 144 தடை உத்தரவை பிறப்பித்துள்ளது.
தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இது குறித்து கூறுகையில், தமிழகம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் இந்த மாதம் 31 ம் தேதி வரையிலும் தமிழகம் முழுவதும் 144 தடை உத்தரவு போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். தமிழகத்தின் அனைத்து மாவட்ட எல்லைகளை மூட உத்தரவிடப்பட்டிருப்பதாகவும், அத்தியாவசியத் தேவை அல்லது அவசரநிலையைத் தவிர வெளியே யாரும் செல்ல வேண்டாம் எனவும் கேட்டுக்கொண்டுள்ளார்.
இந்த சூழ்நிலையில் நாளை முதல் அரசுப்பணியாளர்களுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாகவும், நாளை மாலை 6 மணி முதல் தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களுக்கும் இடையேயான போக்குவரத்திற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், அத்தியாவசிய பொருட்கள் கிடைப்பதில் எந்த சிக்கலும் இருக்காது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பையொட்டி மேற்கொள்ளப்படும் தடுப்பு நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழுஒத்துழைப்பு தர வேண்டும் எனவும் தமிழக முதல்வர் கேட்டுக்கொண்டுள்ளார்.
செய்திகளை ஆடியோ/வீடியோ வடிவில் தெரிந்துகொள்ள எங்களின் Youtube சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளுங்கள்!
Subscribe