அமீரகத்தில் புதிதாக 72 பேர் கொரோனாவால் பாதிப்பு..!! மொத்த எண்ணிக்கை 400ஐ கடந்தது..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் தற்பொழுது புதிதாக 72 பேருக்கு கொரோனா வைரஸ் இருப்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) தெரிவித்துள்ளது. இதனைத் தொடர்ந்து, ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 405 ஆக உயர்ந்துள்ளது என MoHAP வெள்ளிக்கிழமை (இன்று) தெரிவித்துள்ளது.
آخر الإحصائيات حول إصابات فيروس كورونا المستجد (كوفيد 19) في الإمارات
The latest update of Coronavirus (Covid 19) in the UAE#خلك_في_البيت#ملتزمون_يا_وطن#فيروس_كورونا_المستجد #كوفيد19#وزارة_الصحة_ووقاية_المجتمع_الإمارات#stayhome#coronavirus#covid19#mohap_uae pic.twitter.com/xoq7iJ71uI— وزارة الصحة ووقاية المجتمع الإماراتية – MOHAP UAE (@mohapuae) March 27, 2020
புதிதாக பாதிக்கப்பட்டவர்களின் உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர்கள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் இலங்கை, ஜோர்டான், பாலஸ்தீனம், சிரியா, ஈரான், கொமொரோஸ், சீனா, சவுதி அரேபியா, கிர்கிஸ்தான், போஸ்னியா மற்றும் ஹெர்சகோவினா, செர்பியா, கிரீஸ், உருகுவே, ருமேனியா, சுவீடன், தென்னாப்பிரிக்கா, ஈராக், ஏமன் ஆகிய நாடுகளில் இருந்து தலா ஒருவரும், நேபாளம் மற்றும் எத்தியோப்பியா ஆகிய நாடுகளில் இருந்து தலா இருவரும் அடங்குவர்.
மேலும், நான்கு அமீரக குடிமக்கள் , ஐந்து பிரிட்டன் குடிமக்கள், ஐந்து பாகிஸ்தானியர்கள், ஐந்து லெபனான் மற்றும் எட்டு பங்களாதேஷ் நாட்டை சேர்ந்தோர் மற்றும் 23 இந்தியர்கள் ஆகியோரும் தற்பொழுது புதிதாக பாதிக்கப்பட்டவர்கள் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் ஏற்கெனவே கொரோனாவால் பாதிக்கப்பட்ட மூன்று நோயாளிகள் (ஒரு பாகிஸ்தானியர் மற்றும் இரண்டு பங்களாதேஷியர்கள்) முழுமையாக குணமடைந்துள்ளனர். இதனையொட்டி, அமீரகத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவரின் எண்ணிக்கை 55 ஆக உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் வெளிநாட்டில் இருந்து வந்த பயணிகள் மற்றும் ஏற்கெனவே வைரஸால் பாதிக்கப்பட்டோருடன் தொடர்பில் இருந்தவர்கள் என்று தெரிய வந்துள்ளது. இதனைத் தொடர்ந்து, சுகாதார அமைச்சகமும் உள்ளூர் சுகாதார அதிகாரிகளும் சோப்பு மற்றும் தண்ணீரில் கைகளை கழுவுதல், இருமல் மற்றும் தும்மும்போது மூக்கு மற்றும் வாயை மூடுவது போன்ற ஆரோக்கியமான நடைமுறைகளை கடைபிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளனர்.