UAE : இன்று மட்டும் 85 பேருக்கு கொரோனா பாதிப்பு..!!! பாதிப்படைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 333 ஆக உயர்வு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் புதிதாக 85 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) அறிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் மொத்த தொற்றுநோய்களின் எண்ணிக்கை 333 ஆக உயர்ந்துள்ளது. புதன்கிழமை (இன்று) நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அமீரக சுகாதாரத்துறையின் செய்தித்தொடர்பாளர் டாக்டர் ஃபரிதா அல் ஹோசனி இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளர்.
آخر الإحصائيات حول إصابات فيروس كورونا المستجد (كوفيد 19) في الإمارات
.
.
The latest update of Coronavirus (Covid 19) in the UAE#فيروس_كورونا_المستجد #كوفيد19#وزارة_الصحة_ووقاية_المجتمع_الإمارات#coronavirus#covid19#mohap_uae pic.twitter.com/po3rJ3SCB7— وزارة الصحة ووقاية المجتمع الإماراتية – MOHAP UAE (@mohapuae) March 25, 2020
மேலும், மார்ச் 25 புதன்கிழமை (இன்று) 7 பேர் வைரஸின் பாதிப்பில் இருந்து குணமாகியுள்ளனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஐக்கிய அரபு அமீரகத்தில் மொத்தம் 52 பேர் இதுவரை கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டு குணமாகியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.