அமீரக செய்திகள்

கொரோனா தாக்கம் : அபுதாபியில் முக்கிய சுற்றுலாத்தலங்களுக்கு தடை …!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் இருக்கும் முக்கிய சுற்றுலாத்தலங்கள் அனைத்தும் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அபுதாபி ஊடக அலுவலகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ள செய்தியில், “பார்வையாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு ஏற்ப, அபுதாபியின் முக்கிய சுற்றுலா தலங்கள், பூங்காக்கள் மற்றும் கலாச்சார இடங்கள் ஆகியவை மார்ச் 15 முதல் 31 வரை தற்காலிகமாக மூடப்படும். பெருமளவு மக்கள் கூடுவதைத் தவிர்க்க இந்த முடிவு எடுக்கப்பட்டிருக்கிறது ” என்று கூறப்பட்டுள்ளது.

தற்காலிகமாக மூடப்படும் சுற்றுலா தளங்களில் Louvre Abu Dhabi, Qasr Al Watan, Manarat Saadiyat, Qasr Al Hosn, Abu Dhabi Cultural Foundation, Al Ain Palace Museum, Al Ain Oasis, Al Jahili Fort, Qasr Al Muwaiji, Warner Brothers World, Yas Waterworld, Ferrari World and Clymb ஆகியவை அடங்கும்.

கொரோனா வைரஸைத் தடுக்க அமீரகம் முழுவதும் பல நடவடிக்கைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சமீபத்தில் அமீரகத்தில் பூங்காக்கள், நைட் கிளப்கள் போன்றவை தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. மேலும் துபாய் மால் (The Dubai Mall), எமிரேட்ஸ் மால் (Mall of the Emirates) மற்றும் யாஸ் மால் (Yas Mall) ஆகிய இடங்களில் உள்ள ஆப்பிள் ஸ்டோர் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!