அபுதாபியில் சாலை விதிமீறல்களுக்கான 50% அபாரதத் தள்ளுபடித் திட்டம் ஜூன் வரை நீட்டிப்பு..!!!

ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள அபுதாபியில் வாகன ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்ட 50% போக்குவரத்து அபராத தள்ளுபடியை இன்னும் மூன்று மாதங்களுக்கு நீட்டிக்க திட்டமிட்டிருப்பதாக அபுதாபி காவல்துறை சனிக்கிழமை (இன்று) அறிவித்துள்ளது.
ஆரம்பத்தில் டிசம்பரில் தொடங்கப்பட்ட இந்த திட்டம், டிசம்பர் 22 க்கு முன்னர் அபராதம் விதித்தவர்களுக்கு 50% தள்ளுபடியைப் பெறவும், மூன்று மாதங்களுக்கு தண்டனை அல்லது ஓட்டுனர்களுக்கு வழங்கப்பட்ட கரும் புள்ளிகளைத் (Traffic black points) தவிர்க்கவும் வழிவகை செய்தது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் 60 நாட்களுக்குள் அபராதத் தொகை செலுத்துபவர்களுக்கு 35 சதவீத தள்ளுபடியும், 60 நாட்கள் கழித்து அபராதத் தொகை செலுத்துபவர்களுக்கு 25 சதவீத தள்ளுபடியும் வழங்கப்பட்டன. ஆபத்தான விதி மீறல்கள் புரிந்தோருக்கு இது பொருந்தாது என்றும் அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
.@ADPoliceHQ extended the deadline for the 50% discount on traffic violations committed in #AbuDhabi until June 22, 2020. This includes the cancellation of the penalty for towing the vehicle and black points pic.twitter.com/FAN148oIDR
— مكتب أبوظبي الإعلامي (@admediaoffice) March 21, 2020
இந்நிலையில் மார்ச் 22 ஆம் தேதி முடிவடையக் கூடிய இந்த திட்டம் தற்பொழுது ஜூன் 22 வரை நீட்டிப்பு செய்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.
பொதுமக்களை சட்டங்களை கடைப்பிடிக்க ஊக்குவிப்பதற்கும், அவர்களின் சுமைகளைத் தணிப்பதற்கும், அவர்களின் சட்டபூர்வமான நிலையைத் தீர்ப்பதற்கு உதவுவதற்கும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அபுதாபி காவல்துறை தெரிவித்துள்ளது.