அல் அய்னில் அனைத்து பூங்காக்களும் மூடப்படும் : அல் அய்ன் முனிசிபாலிடி அறிவிப்பு!!!

கொரோனா வைரஸின் அச்சத்தை ஒட்டி, அபுதாபியில் உள்ள அல் அய்னில் இருக்கும் அனைத்து பூங்காக்களும் தற்காலிகமாக மூடப்படும் என அல் அய்ன் நகராட்சி தெரிவித்துள்ளது.
சமூகத்தின் ஆரோக்கியத்தைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக அல் அய்ன் நகரத்தில் உள்ள அனைத்து பூங்காக்களையும் மூட உத்தரவிட்டதாக அல் அய்ன் முனிசிபாலிட்டி மார்ச் 9 ம் தேதி ட்விட்டரில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
#بلدية_العين تعلن عن اغلاق جميع الحدائق في مدينة العين ، و ذلك تماشياً مع الإجراءات الاحترازية و حفاظاً على صحة و سلامة المجتمع pic.twitter.com/la3pcZBgAr
— بلدية مدينة العين (@alainmun) March 9, 2020
கொரோனா வைரஸானது பாதிக்கப்பட்டவர்களிடம் இருந்து மற்றவர்களுக்கு மிக எளிதில் பரவுவதால், பொது மக்கள் கூடும் இடங்களான சலூன், நீச்சல் குளம், உடற்பயிற்சிக்கூடம் இதுபோன்ற இடங்களுக்கு செல்லும் மக்கள் விழிப்புடனும் சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அல் அய்ன் முனிசிபாலிடியானது ஏற்கெனவே அனைத்து கட்டடங்கள், பூங்காக்கள் மற்றும் இறைச்சிக்கூடங்கள் ஆகிய இடங்களில் வைரஸ் பரவாமல் தடுக்க சுகாதார நடவடிக்கைகளை மேற்கொண்டது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் அல் அய்னில் உள்ள அனைத்து பூங்காக்களும் மூடப்படும் என்று அறிவித்திருக்கிறது. மீண்டும் அறிவிப்பு வரும் வரை பூங்காக்கள் திறக்கப்படாது என்றும் அல் அய்ன் முனிசிபாலிடி தெரிவித்துள்ளது.