உலக செய்திகள்
சீனாவில் இடிந்து விழுந்த ஹோட்டல்… 70 பேர் சிக்கிக் கொண்டதாகத் தகவல்!!
சீனாவின் கிழக்கு புஜியான் மாகாணத்தில் இன்று மாலை ஹோட்டல் இடிந்து விழுந்ததில் சுமார் 70 பேர் சிக்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்த ஹோட்டல் கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தலுக்கு பயன்படுத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.
குவான்ஜோ நகரில் உள்ள சின்ஜியா ஹோட்டல் இரவு 7.30 மணியளவில் (11.30 GMT) இடிந்து விழுந்தது. இரவு 9 மணியளவில் சுமார் 23 பேர் மீட்கப்பட்டதாக சீன அரசு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
80 அறைகள் கொண்ட இந்த ஹோட்டல் சமீபத்தில் கொரோனா வைரஸ் நோயாளிகளுடன் தொடர்பு கொண்டிருந்த நபர்களுக்கான தனிமைப்படுத்தப்பட்ட இடமாக மாற்றப்பட்டதாக பீப்பிள்ஸ் டெய்லி(Perople’s Daily) செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
மீட்பு முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகத் தற்பொழுது தெரிவிக்கப்பட்டுள்ளது. கட்டடம் இடிந்து விழுந்ந்ததற்கான காரணம் இன்னும் அறியப்படவில்லை.