துபாயில் இருக்கும் மால்களில் அதிரடி தள்ளுபடி விற்பனை!!!

கடந்த சில மாதங்களாக வெளியே செல்லும் மக்களின் எண்ணிக்கை குறைந்துள்ள நிலையில் மால்களிலும் வாடிக்கையாளரின் எண்ணிக்கை குறைந்துள்ளது. இந்நிலையில், அதிக வாடிக்கையாளர்களைக் கவரும் வண்ணம் குறைந்த விலையில் பெரும்பாலான ஹைபர்மார்க்கெட்கள் பொருட்களை வழங்குகிறது.

துபாயில் இருக்கும் அனைத்து மால்களிலும் உள்ள பெரியளவிலான ஹைபெர்மார்க்கெட்களில் அத்தியாவசிய பொருட்கள், எலக்ட்ரானிக் பொருட்கள் போன்ற அனைத்து பொருட்களிலும் தள்ளுபடி வழங்கப்படுகிறது. சோப்பு, எண்ணெய் போன்ற மிகவும் அத்தியாவசியமான பொருட்களுக்கு அதிகளவிலான தள்ளுபடியை ஹைபெர்மார்க்கெட்கள் வழங்குகின்றன.

50 அங்குல பெரிய பிலிப்ஸ் பிளாட் ஸ்கிரீன் யுஹெச்.டி டிவி (50 inches Philips flat screen UHD TV) திர்ஹம் 999 விலையிலும், 43 அங்குல (43 inches) விலை திர்ஹம் 839 ஆகவும், 32 அங்குல (32 inches) விலை திர்ஹம் 399 ஆகவும் விற்கப்படுகிறது.

ஹைசென்ஸ், ஸ்கைவொர்த், சாங்ஹாங் மற்றும் TCL உள்ளிட்ட பிற பிராண்டுகளுக்கும் அதிக தள்ளுபடி வழங்கப்பட்டுள்ளது.