எந்தவொரு சமூக ஊடக கணக்குகளிலும் இல்லை – நடிகர் அஜீத் அதிகாரப்பூர்வ விளக்கம்!!

தமிழ்நாட்டில் பெரும் ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் அஜித். ரசிகர்களால் “தல” என்று செல்லமாக அழைக்கப்படும் அஜித் அவர்கள் இதுவரை எந்தவொரு சமூக ஊடகக் கணக்குகளிலும் இல்லை. ஏற்கெனவே அவர், தான் சமூக ஊடகக் கணக்குகள் எதிலும் இல்லை என்றும் இனிமேல் இணைய போவதும் இல்லை என்றும் கருத்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் மார்ச் 6ம் தேதி நடிகர் அஜித் சமூகவலைதளங்களில் இணைவதாக அறிக்கை வெளியாகி ரசிகர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியது. அஜித்குமாரின் கையெழுத்துடன் கூடிய அந்த அறிவிப்பில் தான் சமூக வலைதளத்தில் இணைந்து கொள்ளப்போவதாகக் கூறப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, நடிகர் அஜித்திற்கு எந்த சமூக ஊடகத்திலும் கணக்கு இல்லை, அவர் எந்த சமூக ஊடங்களிலும் இணைய விரும்பவில்லை என்று அஜித் தரப்பிலிருந்து கடிதம் மூலமாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. இது குறித்து அவரது தரப்பில் வெளியிட்ட அறிக்கையில், சமூக வலைதளங்களில் வரும் எந்தவொரு கருத்தையும் ஆதரிக்கவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் ரசிகர்கள் பக்கத்தையும், குழுவையும் ஆதரிக்கவில்லை என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. சமூக வலைதளங்களில் தான் இணையப்போவதாக வெளியான கடிதம் போலியானது, தன்னால் வெளியிடப்படவில்லை என்று அறிக்கையில் கூறப்பட்டிருக்கிறது.
மேலும் அஜித் பெயர் மற்றும் கையெழுத்து தவறுதலாக பயன்படுத்தியவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது