துபாய் : இன்று முதல் தனியார்துறை நிறுவனங்களும் “WORK FROM HOME” முறையில் வேலை செய்ய உத்தரவு..!!!
துபாயின் பொருளாதார மேம்பாட்டுத்துறை (Department of Economic Development,Dubai) அனைத்து தனியார் துறை நிறுவனங்களுக்கும் அந்நிறுவனங்களின் 80 சதவீத ஊழியர்களுக்கு வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை (Work From Home) தொடங்க அறிவுறுத்தியுள்ளது. இந்த உத்தரவு இன்று (மார்ச்-25,புதன்) முதல் ஏப்ரல் 9 வியாழக்கிழமை வரை பின்பற்றப்பட உள்ளது. கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் முயற்சிகளில் ஒரு பகுதியாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
#خلك_في_البيت #ملتزمون_يا_وطن #StayHome pic.twitter.com/BxRRgR6Zgt
— اقتصادية دبي (@Dubai_DED) March 25, 2020
இந்த முடிவிலிருந்து விலக்கு அளிக்கப்பட்ட வணிகங்களும் அறிவிக்கப்பட்டுள்ளன. துபாய் பொருளாதார மேம்பாட்டுத்துறையின் படி, மருந்தகங்கள், மளிகைக் கடைகள், பல்பொருள் அங்காடிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்கள் ஆகியவற்றிற்கு இந்த உத்தரவில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளன.
தற்போதைய நிலவரப்படி, கொரோனா வைரஸால் அமீரகத்தில் 333 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்கும் வகையில் ஏற்கெனவே அனைத்து கல்விநிறுவங்களுக்கும் தொலைதூரக் கல்விமுறை மற்றும் இது போன்ற பல நடவடிக்கைகளை தொடர்ந்து எடுத்து வரும்பட்சத்தில், தற்பொழுது துபாய் பொருளாதாரத் துறை, தனியார் நிறுவனங்களும் அந்நிறுவனங்களின் ஊழியர்களை வீட்டிலிருந்தே வேலை செய்யும் முறையை (Work From Home) தொடங்க உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.