விடுமுறைக்காக இந்தியா சென்று அமீரகம் திரும்பியவருக்கு கொரோனா வைரஸ்…!!!

ஐக்கிய அரபு அமீரகத்தின் சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் (MoHAP) சனிக்கிழமை மேலும் ஒருவர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது. பாதிக்கப்பட்டவர் இந்தியாவைச் சேர்ந்தவர் என்றும் வருடாந்திர விடுமுறைக்கு சொந்த நாட்டிற்கு சென்று வந்தவர் என்றும் தெரிய வந்துள்ளது.
பாதிக்கப்பட்டவரோடு நெருங்கிய தொடர்பு கொண்ட அனைவரையும் பரிசோதிப்பது உட்பட கொடிய நோய் பரவாமல் தடுக்க தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
நோய் பரவுவதைத் தடுப்பதற்கான தடுப்பு சுகாதார மற்றும் தனிப்பட்ட சுகாதார நெறிமுறைகளைப் பின்பற்றவும், அதன் வலைத்தளதிலும், ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள சுகாதார அதிகாரிகளின் அதிகாரப்பூர்வ வலைத்தளங்களிலும் கிடைக்கும் விழிப்புணர்வு வழிமுறைகளைப் படித்து வதந்திகளைப் பரப்புவதைத் தவிர்க்கவும் அமைச்சகம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.