கொரோனா பாதிப்பு எதிரொலி : IPL போட்டி அடுத்த மாதத்திற்கு ஒத்தி வைக்க வாய்ப்பு..??
இந்த ஆண்டுக்கான IPL போட்டி இம்மாதம் 29 ம் தேதி நடக்க இருந்த நிலையில் தற்பொழுது ஏப்ரல் 15 ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக BCCI (Board of Control for Cricket in India) தெரிவித்துள்ளது.
IPL நடத்துவது தொடர்பான ஆலோசனைக்கூட்டத்தை IPL நிர்வாகக்குழு IPL அணியின் அனைத்து உரிமையாளர்களுக்கும் அழைப்பு விடுத்திருந்தது. இந்நிலையில், IPL போட்டிகள் அடுத்த மாதம் 15 ம் தேதி நடைபெறும் என BCCI செய்தி வெளியிட்டுள்ளது. கொரோனா வைரசிற்கான தடுப்பு நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்றும் கூறப்பட்டுள்ளது.
????Announcement????: #VIVOIPL suspended till 15th April 2020 as a precautionary measure against the ongoing Novel Corona Virus (COVID-19) situation.
More details ➡️ https://t.co/hR0R2HTgGg pic.twitter.com/azpqMPYtoL
— IndianPremierLeague (@IPL) March 13, 2020
தற்பொழுது, இந்தியாவில் கொரோனாவின் பாதிப்பு அதிகமிருப்பதால் பெரிதளவு மக்கள் கூடும் இடங்களைத் தவிர்க்க இந்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளது. மேலும், அனைத்து வெளிநாட்டினருக்குமான சுற்றுலா விசா வழங்குவதை ஒரு மாதம் ரத்து செய்துள்ளது. IPL கிரிக்கெட் போட்டியில் வெளிநாட்டு வீரர்களும் கலந்து கொள்வார்கள் என்பதால், தற்பொழுது அவர்கள் இந்தியா வருவதற்கான சாத்தியக்கூறுகள் இல்லை.
கூடுதலாக, டெல்லியில் போட்டி நடைபெறுவதற்கு டெல்லி அரசு தடைவிதித்துள்ளது. மற்ற மாநிலங்களுக்கும் கொரோனா அச்சம் இருப்பதால், IPL போட்டி அங்கு விளையாடுவது குறித்து யோசிக்கத்தொடங்கியுள்ளன. இத்தகைய காரணங்களால் IPL போட்டியானது அடுத்த மாதம் ஒத்தி வைக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.