அமீரகத்தில் கொரோனா : பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 150ஐ கடந்தது..!!! இன்று மட்டும் 13 பேர் பாதிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸிற்கு புதிதாக 13 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் தடுப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இதனால், ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 153 ஆக உயர்ந்துள்ளது. பாதிக்கப்பட்டவர்கள் அனைவருக்கும் முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது.
. @mohapuae announced 13 new #Coronavirus #COVID19 cases and the full recovery of 7 cases
— هيئة الصحة بدبي (@DHA_Dubai) March 21, 2020
பாதிக்கப்பட்டவர்களில் தற்பொழுது கூடுதலாக ஐக்கிய அரபு அமீரகம், பாகிஸ்தான் , இந்தியா, பங்களாதேஷ், பிரிட்டன், போர்ச்சுகல், பிலிப்பைன்ஸ் மற்றும் போலந்து ஆகிய நாட்டை சேர்ந்த 7 பேர் குணமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் அமீரகத்தில் 38 பேர் தற்பொழுது வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டு குணமடைந்துள்ளனர்.
அபுதாபியின் சுகாதாரத் துறையின் தொற்று நோய்கள் துறை இயக்குநர் டாக்டர் ஃபரிதா அல் ஹொசனி, பொது மக்கள் அவசியமான நேரங்களைத் தவிர மற்ற நேரங்களில் வீட்டை விட்டு வெளியேற வேண்டாம் என்று கூறியுள்ளார்.
மேலும், மால்கள், ரெஸ்டாரண்ட் போன்ற இடங்களுக்கு செல்வதைக் குறைத்துக் கொள்ளவும், பொது இடங்களில் மற்றவர்களை சந்திக்கும் பொது குறைந்தது ஒரு மீட்டர் இடைவெளி ஏற்படுத்திக்கொள்ளவும் பரிந்துரைத்துள்ளார். அதே போல், அவசியமற்ற காரணத்திற்காக மக்கள் பொதுப்போக்குவரத்தை பயன்படுத்துவதை தவிர்க்கவும் கேட்டுக்கொண்டுள்ளார்.