அமீரகம் : #StayHome என்பதை வலியுறுத்தி ரெஸ்டாரன்ட் மற்றும் கஃபேவிற்கு புதிய கட்டுப்பாடு..!!! பீச், பார்க் போன்ற பொது இடங்களை மூட உத்தரவு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் விதமாக அமீரகத்தின் பெரும்பாலான, பொதுமக்கள் அதிகம் கூடும் பொதுவான இடங்கள் என கண்டறியப்படும் அனைத்து இடங்களும் மூடப்படுவதாக அமீரக அரசின் சார்பாக இன்று சனிக்கிழமை சற்று முன்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது பற்றி, தேசிய அவசர நெருக்கடி மற்றும் பேரிடர் மேலாண்மை ஆணையம் தனது ட்விட்டர் பக்கத்தில் “அனைத்து பப்ளிக் மற்றும் பிரைவேட் பீச், பார்க், பப்ளிக் மற்றும் பிரைவேட் ஸ்விம்மிங் பூல், தியேட்டர், பிட்னெஸ் சென்டர், ஜிம் ஆகிய அனைத்தும் நாளை ஞாயிற்றுக்கிழமை (மார்ச் 22) முதல் அடுத்த இரண்டு வார காலத்திற்கு தற்காலிகமாக மூடபடுவதாக” அந்த இடுகையில் தெரிவித்துள்ளது.
மேலும் அன்றாட தேவைகளான ரெஸ்டாரண்ட், கஃபேக்கள் மற்றும் புட் அண்ட் பிவரேஜ் நிலையங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. இவை அனைத்திற்கும் ஹோம் டெலிவரி செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும், ஹோம் டெலிவரி செய்யும் பட்சத்தில் தேவையான சுகாதார நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
The National Emergency Crisis and Disasters Management Authority and the Ministry of Health and Prevention have announced the closure starting tomorrow, Sunday, of public & private beaches, parks, swimming pools, movie theatres, and sports halls and lounges for two weeks. pic.twitter.com/JhYQ8Oanww
— NCEMA UAE (@NCEMAUAE) March 21, 2020
உணவகங்களில் அமர்ந்து உணவு உண்பதற்கும் அதன் மொத்த இருக்கைகளின் எண்ணிக்கையில் 20 சதவிகிதம் மட்டுமே உணவகங்களில் அமர்ந்து உணவு உன்ன அனுமதிக்கப்படும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. குறைந்தபட்சம் 2 மீட்டர் இடைவெளி விட்டே இருக்கைகள் போடப்பட்டிருக்க வேண்டும் என்றும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமீரக சட்டத்தின் படி இந்த முடிவுகளை அமல்படுத்துவதற்கு அனைத்து கூட்டாட்சி மற்றும் உள்ளூர் நிறுவனங்களும் பொறுப்பேற்க வேண்டும் என்றும் மேலும் அவர்கள் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை கடைபிடிப்பதை கண்காணிப்பதோடு அதைப் பற்றி பொதுமக்களுக்குக் தேவையான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுளளது.