சவுதி அரேபியா : தனியார் துறை சார்ந்த தொழில்கள் அனைத்தும் தற்காலிக நிறுத்தம்…!!!
சவுதி அரேபியாவில் தொடர்ந்து கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரிப்பதைத் தொடர்ந்து அனைத்து தனியார் துறைகளின் வேலைகளையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்துள்ளது. சுகாதார மற்றும் உணவு சார்ந்த நிறுவனங்கள் தவிர மற்ற அனைத்து தனியார் துறைகளிலும் 15 நாட்களுக்கு சவுதி அரேபியா பணிகளை நிறுத்தி வைத்துள்ளதாக அரசு செய்தி நிறுவனம் புதன்கிழமை அதிகாலை தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் இதுவரை 171 பேர் கொரோனா வைரஸால் பாதிப்படைந்துள்ளனர். நாட்டில் கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த சவுதி அரசாங்கம் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
சவுதியில் அனைத்து நாடுகளுக்குமான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது. சமீபத்தில் பொது மக்கள் அதிகம் கூடும் இடமான மசூதிகளில் கொரோனாவைரஸ் பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் இறைவணக்க வழிபாடுகளை நிறுத்தியுள்ளது.
இந்நிலையில் கொரோனா வைரஸில் இருந்து மக்களை பாதுகாக்கவும், உலகப் பொருளாதாரத்தை மீட்டெடுக்கவும் சவுதி அமைச்சகம், G20 குழுமத்தில் உள்ள அனைத்து நாடுகளுக்கும் G20 தலைவர்கள் உச்சி மாநாட்டை விர்ச்சுவல் முறையில் (virtual G20 leaders summit) அடுத்த வாரம் நடத்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.