UAE : ஷார்ஜாவில் அனைத்து AC பேருந்து நிறுத்தங்களும் தற்காலிகமாக மூடல்..!!! ஷார்ஜா RTA அறிவிப்பு..!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜா சாலைகள் மற்றும் போக்குவரத்து ஆணையம் (RTA) குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கான அனைத்து பேருந்து நிறுத்தங்களையும் (Bus Stop) தற்காலிகமாக மூடுவதாக அறிவித்துள்ளது. கொரோனா வைரஸ் பரவுவதைத் தடுப்பதற்கும், பொதுமக்களின் ஆரோக்கியத்தை பாதுகாப்பதற்கும் ஒரு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. அடுத்த அறிவிப்பு வரும் வரை பேருந்து நிறுத்தங்கள் தொடர்ந்து மூடப்பட்டிருக்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
حرصا من الهيئة على سلامتكم، واستكمالاً لسلسلة الإجراءات الإحترازية للحماية من فيروس كورونا المستجد، تقرر إغلاق جميع محطات انتظار الحافلات المكيفة. pic.twitter.com/TnEwqiFjgb
— RTA Sharjah (@RTA_Shj) March 25, 2020
“உங்கள் பாதுகாப்பிற்காகவும், வளர்ந்து வரும் கொரோனா வைரஸிலிருந்து பாதுகாக்க எடுக்கப்படும் தொடர்ச்சியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நிறைவு செய்வதற்காகவும், குளிரூட்டப்பட்ட பேருந்துகளுக்கான அனைத்து பேருந்து நிறுத்தங்களையும் மூட முடிவு செய்யப்பட்டது” என்று RTA ட்விட்டரில் செய்தி தெரிவித்துள்ளது.