அபுதாபி பேருந்து நிலையத்தில் கொரோனா பரவுவதைத் தடுக்க புதிய “Smart Disinfection Gate”…!!! பயணிகளை பாதுகாக்க சிறப்பு நடவடிக்கை…!!!!
ஐக்கிய அரபு அமீரகத்தில் இருக்கும் அபுதாபியில் உள்ள மத்திய பேருந்து நிலையத்தில் (main bus station) கொரோனா வைரஸ் தொற்றுலிருந்து பொதுமக்களின் உடல்நலத்தை பாதுகாக்கும் பொருட்டு ஸ்மார்ட் வாயிலை (Smart Gate) நிறுவியுள்ளதாக அபுதாபியின் நகராட்சிகள் மற்றும் போக்குவரத்துத் துறையின் ( Department of Municipalities and Transport,DMT) ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (Integrated Transport Centre,ITC) செவ்வாயன்று தெரிவித்துள்ளது.
இந்த ஒருங்கிணைந்த போக்குவரத்து மையம் (ITC) கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த, இதேபோன்ற ஸ்மார்ட் கேட் அமீரகத்தின் அனைத்து முக்கிய பேருந்து நிலையங்களிலும் நிறுவப்படும் என்று தெரிவித்துள்ளது.
மேற்குறிப்பிட்ட ஸ்மார்ட் கேட்கள் வழியாக பயணிகள் நுழையும் பொது, அந்த ஸ்மார்ட் கேட்டானது பயணிகள் நுழைவதைக் கண்டறிந்து, அவர்களின் பாதுகாப்பை உருதி செய்யும் பொருட்டு தானாகவே கிருமிநாசினி கொண்ட பொருட்களை தெளிக்கிறது. இது ஒவ்வொரு நாளும் காலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை இயங்குகிறது. மேலும், இந்த ஸ்மார்ட் கேட் ஒரு சிறப்பு குழுவினரால் தினமும் சுத்திகரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு சுத்தம் செய்யப்பட்டு வருகிறது.
அமீரகத்தில் கொரோனா வைரஸ் பரவ ஆரம்பித்ததில் இருந்து ITC, போக்குவரத்துத் துறையில் பல முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது. இந்த நடவடிக்கைகளில் ஒரு பகுதியாக தற்பொழுது பயணிகளின் பாதுகாப்பை உறுதி செய்ய ஸ்மார்ட் கேட் நிறுவியது வரவேற்கத்தக்கது.