அமீரக செய்திகள்

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தின் டெர்மினல்-2 விமான சேவை நிறுத்தம்…!!!

அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் டெர்மினல்-2 ஆனது தற்பொழுது மூடப்படுவதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இன்று வெளியிடப்பட்ட அறிக்கையில், அபுதாபி விமான நிலையம் பயணிகளுக்கு சேவைகளை வழங்குவதை மேம்படுத்துவதற்காக டெர்மினல்-2 ஐ மூடுவதாக ட்வீட் செய்துள்ளது. தற்போதுள்ள அனைத்து விமான சேவைகளும் அபுதாபி சர்வதேச விமான நிலையத்தில் இருக்கும் டெர்மினல்-1 க்கு இடம்பெயரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவியதை தொடர்ந்து பல விமான நிறுவனங்கள் விமானங்களை நிறுத்தி வைத்ததை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று கூறப்பட்டு வருகிறது.

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button
error: Content is protected !!